செய்திகள் மலேசியா
ஏர் ஆசியா ஏகே 720 விமானத்தில் நடந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை
சிப்பாங்:
சிங்கப்பூரிலிருந்து கோலாலம்பூருக்கு வந்த ஏகே 720 விமானத்தில் ஏற்பட்ட சிறிய விபத்தைத் தொடர்ந்து, பயணிகள் அல்லது விமானப் பணியாளர்களுக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை.
ஏர் ஆசியா நிறுவனம் ஓர் அறிக்கையின் வாயிலாக இதனை உறுதிப்படுத்தியது.
விமானம் தரையிறங்கும்போது கேபின் பேனலுடன் இணைக்கப்பட்டிருந்த குழாயின் ஒரு பகுதி தளர்ந்து கழன்றது.
இதனால் கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதி இரவு 10.22 மணிக்கு கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தின் முனையம் 2-ல் விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கப்பட்டது.
விமானம் புறப்படுவதற்கு முன்னர் அனைத்து விமானப் பயணத்திற்கு முந்தைய பாதுகாப்புத் தேவைகளையும் பூர்த்தி செய்யப்பட்ரது.
அதோடு ஒவ்வொரு 36 மணி நேரத்திற்கும் ஒருமுறை மேற்கொள்ளப்படும் மதிப்பீடுகள் உள்ளிட்ட வழக்கமான ஆய்வுகள் உட்பட, தேவையான அனைத்து பராமரிப்புச் சோதனைகளையும் மேற்கொண்டிருந்தது.
விமானம் தரையிறங்கியதும், பாதிக்கப்பட்ட பேனல்கள் பாதுகாப்பாகவும் முறையாகவும் மீண்டும் பொருத்தப்பட்டுள்ளனவா என்பதை உறுதி செய்வதற்காக, ஏர் ஆசியாவின் பொறியியல் குழுவும் ஒரு முழுமையான ஆய்வை மேற்கொண்டது என்று அந்த அறிக்கை தெரிவித்தது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 10, 2026, 11:20 pm
ரபிசி குறித்து கருத்து தெரிவிக்க மறுப்பு; பொருளாதாரத்திற்கே அதிக முன்னுரிமை: பிரதமர்
April 10, 2026, 11:19 pm
எஸ்பிஎம் தேர்வின் நன்னெறி பாடத்தில் ஏ எடுப்பது அவ்வளவு சிரமமா?: டத்தோ நெல்சன் கேள்வி
April 10, 2026, 11:17 pm
தெலுக் இந்தானில் சித்ரா பௌர்ணமி திருவிழா; தற்காலிக வணிகக் கூடாரங்கள் இடம் மாற்றம் காணாது: சிவநேசன்
April 10, 2026, 11:16 pm
80ஆம் ஆண்டு நிறைவு விழா; மஇகாவின் அடையாளத்தையும் சாதனையையும் பறைசாற்றும்: டத்தோ முருகையா
April 10, 2026, 3:43 pm
நாற்காலியால் மனைவியை அடித்த வேலையில்லாதவருக்கு RM3,500 அபராதம்
April 10, 2026, 3:33 pm
மலேசியாவின் 6 கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்துவிட்டன
April 10, 2026, 3:32 pm
பற்றி எரிந்த அடுக்குமாடி வீடு: 60 வயது முதியவர் உடல் கருகிய நிலையில் மீட்பு
April 10, 2026, 3:23 pm
பெலூரானில் 157 மாணவர்கள் தவிப்பு: வெயிலிலும் மழையிலும் கூடாரத்தின் கீழ் கல்வி பயிலும் அவலம்
April 10, 2026, 12:55 pm
