நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பக்கத்து வீட்டுப் பெண்ணுடன் காரில் கள்ள உறவு

மூவார்: 

இரண்டு மாதங்களுக்கு முன் ஒரு குழந்தை பிறக்கும் வரை, 22 வயதுடைய தனது காதலியுடன் அவர் திருமணம் செய்யாமல் வாழ்ந்ததால் நேற்று அதிகாலையில் ஒரு ஆண் கைது செய்யப்பட்டார்.

காலை 11.30 மணியளவில் கைது செய்யப்பட்ட 24 வயதுடைய அந்த ஆண், ஜொகூர் மாநில இஸ்லாமிய மதத் துறையின் (ஜெய்ஞ்) அதிகாரிகள், அமலாக்கப் பணியாளர்களிடமிருந்து, முறையற்ற குழந்தை பிறப்பு குறித்த புகார் ஒன்றைப் பெற்றதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டார்.

ஜெய்ஞ்சின் கூற்றுப்படி, புகார் கிடைத்தவுடன், அமலாக்கக் குழு ஒன்று காலை 10 மணிக்கு அந்தப் பெண்ணின் வீட்டிற்குச் சென்றது. அங்கு, தூங்கிக் கொண்டிருந்த இரண்டு மாத குழந்தையை அவர்கள் கண்டனர்.

"விசாரணையின் முடிவில், அந்தப் பெண் கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்ட பின்னர் வேலையை விட்டு விலகியதாகக் கண்டறியப்பட்டது. அவர், அதே கிராமத்தைச் சேர்ந்த அண்டை வீட்டாரான ஆணுடன் முறையற்ற செயலில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டார்.

"இந்த ஜோடி நீண்ட காலமாக ஒருவரையொருவர் அறிந்திருந்தனர். விசாரிக்கப்பட்டபோது, கடந்த ஆண்டு சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரின் உள்ளே அவர்கள் ஒழுங்கற்ற உறவில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டனர்" என்று ஜெய்ஞ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அந்தப் பெண்ணின் ஒப்புதலைத் தொடர்ந்து, அமலாக்க அதிகாரிகள் அங்கிருந்து சிறிது தொலைவில் இருந்த அவரது காதலனின் வீட்டிற்கு விரைந்து, பின்னர் அவரைக் கைது செய்தனர்.

திருமணமாகாத, இந்த மாவட்டத்தில் பகுதி நேரமாக வேலை செய்யும் இந்த ஆண், தனது வீட்டில் அமலாக்க அதிகாரிகளைப் பார்த்ததும் திடுக்கிட்டுப் போனதாகத் தெரியவந்துள்ளது.

"அந்தப் பெண் குறித்து விசாரிக்கப்பட்டபோது, இந்த ஆண் அமைதியாக இருந்தார். அவர் இறுதியில் அந்தச் செயலைச் செய்ததாக ஒப்புக்கொண்டார்.

"முதலில், தான் செய்ததற்காக வருந்துவதாகவும், அந்தப் பெண்ணைத் தனது மனைவியாக்கிக் கொள்வதாகவும், புதிதாகப் பிறந்த குழந்தைக்குப் பொறுப்பேற்பதாகவும் அந்த ஆண் கூறினார்.

"எவ்வாறாயினும், திருமணம் செய்து கொள்ளத் தயாரா என்று பலமுறை கேட்டபோது, அந்த ஆண் தப்பிக்க முயன்றார். அந்தப் பெண் குழந்தை பெற்றெடுப்பதற்கு முன், திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக அந்த ஆண் தெரிவித்திருந்தார்.

"ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இதுபோன்ற புகாரை அமலாக்க அதிகாரிகள் பெறும் வரை, அந்த ஆணின் நோக்கம் இதுவரை நிறைவேறவில்லை.

"தனது செயல்களுக்குப் பொறுப்பான ஒரு ஆண் என்பதைக் காட்டும் வகையில், உடனடியாக திருமணம் செய்து கொள்ளுமாறு அமலாக்க அதிகாரிகள் அவருக்கு அறிவுறுத்தினர். மேலும், வருந்தி மனமாற்றம் அடையவும் அறிவுறுத்தினர்" என்று ஜெய்ஞ் கூறினர்.

அந்த ஜோடியின் பெற்றோர்களையும் அமலாக்க அதிகாரிகள் அழைத்ததாகவும், ஒரு சிறந்த தீர்வைக் கண்டுபிடிக்குமாறு கூறப்பட்டதாகவும் ஜெய்ஞ் தெரிவித்தனர்.

"இந்த ஜோடி இருவரும் ஜொகூர் மாநில ஷரியா கிரிமினல் குற்றங்கள் சட்டம் 1997-ன் பிரிவு 23-ன் கீழ் குற்றஞ்சாட்டப்படுவார்கள்.

 "குற்றம் நிரூபிக்கப்பட்டால், RM5,000 வரை அபராதம், அல்லது மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை, அல்லது ஆறு பிரம்படிகள் விதிக்க வகைசெய்கிறது" என்று ஜெய்ஞ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset