செய்திகள் மலேசியா
தேசிய இந்து ஆலய சிறப்புக் குழுவின் செயல்பாடுகள் குறித்து தெங்கு ஸப்ரூலிடம் விளக்கமளிக்கபட்டது: குணராஜ்
கோலாலம்பூர்:
தேசிய இந்து ஆலய சிறப்புக் குழுவின் செயல்பாடுகள் குறித்து பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகர் டத்தோஶ்ரீ தெங்கு ஸப்ரூலிடம் விளக்கமளிக்கபட்டது.
செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் இதனை கூறினார்.
தேசிய இந்து கோயில் சிறப்புக் குழுவின் உருவாக்கம், அதன் நோக்கம், தற்போதைய செயல்பாட்டு நிலை மற்றும் எதிர்காலத்திற்கான முக்கியத் தேவைகள் உள்ளிட்டவை குறித்து அவருக்கு விளக்கமளிக்க இந்தச் சந்திப்பு ஒரு வாய்ப்பை வழங்கியது.
டத்தோ முரு, வி.என். பரமேஸ்வரி, ரிஷி குமார், வி.என். விஜய பாஸ்கர் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.
எங்களின் விளக்கத்தை அவர் கவனமாகக் கேட்டதோடு ஆக்கப்பூர்வமான, பயனுள்ள ஆலோசணைகளையும் அவர் வழங்கினார்.
மேலும் தேசிய இந்து கோயில் சிறப்புக் குழுவின் நோக்கங்கள், சவால்கள், பணிகளின் எல்லை ஆகியவற்றை நன்கு புரிந்துகொள்வதற்காக, அவர் பொருத்தமான, சிந்தனையுள்ள கேள்விகளை எழுப்பினார்.
குறிப்பாக ஆலயம் தொடர்பான தற்போதைய பிரச்சினைகளைத் தீர்ப்பதில், ஆதரவிற்கான சாத்தியமான வழிகள் குறித்த தனது கருத்துக்களையும் அவர் பகிர்ந்து கொண்டார்.
முக்கியமாக, சிறப்பு குழுவுடன் நெருக்கமாகப் பணியாற்றுவதற்கும், குறிப்பாக முக்கியப் பங்குதாரர்களுடன் திறம்பட ஈடுபடுவதற்கு வழிவகுப்பதற்கும் தனது உறுதிப்பாட்டை டத்தோஶ்ரீ தெங்கு ஸப்ரூல் வெளிப்படுத்தினார்.
ஒட்டுமொத்தமாக, இக்கூட்டம் ஊக்கமளிப்பதாகவும் நம்பிக்கையளிப்பதாகவும் இருந்ததுடன், தொடர்ச்சியான ஒத்துழைப்பு, ஆதரவிற்கான நேர்மறையான அறிகுறிகளையும் காட்டியது என்று குணராஜ் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 8, 2026, 12:22 pm
பக்கத்து வீட்டுப் பெண்ணுடன் காரில் கள்ள உறவு
April 8, 2026, 12:06 pm
மலேசியாவில் எண்ணெய் விலை உயர்வதற்கு எந்தக் காரணமும் இல்லை: ஹாடி அவாங்
April 8, 2026, 12:05 pm
எரிசக்தி நெருக்கடி குறித்த போலிச் செய்திகளைப் பரப்பியதற்காக 22 பேர் மீது விசாரணை
April 8, 2026, 11:13 am
குவாந்தான் பேருந்து நிலையத்தில் அதிர்ச்சி: இருக்கையிலேயே உயிரிழந்த பெண்
April 8, 2026, 10:45 am
எல்லையில் பரபரப்பு: பெட்ரோல் கடத்தலில் ஈடுபட்ட தாய்லாந்து ராணுவ வீரர் மலேசியாவில் கைது
April 8, 2026, 10:28 am
இறக்குமதி பொருட்களின் விலைகள் 3 முதல் 10% வரை உயரக்கூடும்: மைடின் உரிமையாளர்
April 8, 2026, 10:27 am
ஜொகூர் அம்னோ தனித்துப் போட்டியிடுவதையே விரும்புகிறது: 40 தொகுதிகளை இலக்காக கொண்டுள்ளது
April 8, 2026, 10:26 am
தனியார் உயர் கல்விக் கூட ஆராய்ச்சித் திட்ட ஊழல்: இரண்டு விரிவுரையாளர்கள் உட்பட நால்வர் கைது
April 8, 2026, 10:09 am
