நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இரண்டு ஐ.பி.ஜி. மாணவர்களின் உடல்கள் சரவாக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டன

அலோர் ஸ்டார்: 

கடந்த சனிக்கிழமை பந்தாய் மெர்டேக்காவில் நடைபெற்ற கயாக்கிங் நடவடிக்கையில் பங்கேற்றபோது மூழ்கி இறந்த பெர்லிஸ் வளாகத்தின் ஆசிரியர் கல்வி நிறுவனத்தைச் (ஐ.பி.ஜி.) சேர்ந்த இரண்டு மாணவர்களின் உடல்கள், இன்று காலை சரவாக்கிற்கு திருப்பி அனுப்பப்பட்டன.

இறந்தவர்களான கிறிஸ்டோபர் லிங் ஜியா சியாங் (வயது 21), ஜோய் லிங் லின் சியாங் (வயது 20) ஆகியோரின் உடல்கள், காலை 6 மணியளவில் பினாங்கு சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஒரு சரக்கு விமானத்தில் எடுத்துச் செல்லப்பட்டன. அதன் பின்னர், கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் (கே.எல்.ஐ.ஏ.) அவை இடைநிறுத்தப்பட்டன.

ஜோயியின் உடல், மதியம் 3.45 மணிக்கு சிபு நோக்கிய விமானத்தில் தொடர்ந்து செல்லும் என திட்டமிடப்பட்டுள்ளது. அதே வேளையில், கிறிஸ்டோபரின் உடல் கூச்சிங்கிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

நேற்றிரவு சுல்தானா பாஹியா மருத்துவமனையின் (HSB) தடயவியல் துறையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், விரிவுரையாளர்கள் இறுதி அஞ்சலி செலுத்த வந்திருந்த நிலையில், சோகமான சூழ்நிலை நிலவியது கண்டறியப்பட்டது.

இதற்கிடையில், ஜோயியின் அத்தை கீ சிங் சிங் (46), அந்தச் சம்பவம் குறித்த வெளிப்படையான, முழுமையான விசாரணை அறிக்கையைக் கல்வி அமைச்சு (KPM) வழங்க வேண்டும் என்று குடும்பம் எதிர்பார்ப்பதாகக் கூறினார்.

அந்த நடவடிக்கை பாதுகாப்பு அம்சங்களையும், நிலையான இயக்க நடைமுறைகளையும் (எஸ்.ஓ.பி.) பின்பற்றியதா என்பதையும், கயாக்கிங் நடவடிக்கைக்கான இடம் பொருத்தமானதா என்பதையும் குடும்பம் அறிய விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

"இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நிகழாமல் இருக்க, இதுபோன்ற பாடத்திட்டம் அல்லது வெளிப்புற நடவடிக்கைகளைச் செயல்படுத்தும் முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் நாங்கள் நம்புகிறோம்" அவர் கூறினார்.

இதற்கு முன்னர், கல்வி அமைச்சர் ஃபாட்லினா சைடேக், இரங்கலைத் தெரிவிப்பதற்காகவும், ஆதரவை வழங்குவதற்காகவும் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்திக்க வந்திருந்தார்.

கடந்த சனிக்கிழமை மாலை 5 மணியளவில் நடைபெற்ற சம்பவத்தில், பெர்லிஸ் ஐ.பி.ஜி.- யைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள், பந்தாய் மெர்டேக்கா கடல் பகுதியில் கயாக்கிங் நடவடிக்கையில் பங்கேற்ற போது மூழ்கி இறந்ததாக தெரிவிக்கப்பட்டது.
போலீசார் இந்தச் சம்பவத்தை திடீர் மரணம் என வகைப்படுத்தியுள்ளனர்.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset