செய்திகள் உலகம்
வங்கதேசத்தில் தட்டம்மையின் கோரமுகம்: 13 லட்சம் குழந்தைகளுக்கு அவசரத் தடுப்பூசி
டாக்கா:
வங்கதேசம் நேற்று தட்டம்மை-ரூபெல்லாவிற்கு எதிரான அவசர தடுப்பூசி இயக்கத்தைத் தொடங்கியுள்ளது.
மரண எண்ணிக்கை தொடர்ந்து உயரும் நிலையில், அதிக தொற்று விகிதம் பதிவான பகுதிகளில் 13 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளை இந்த இயக்கம் இலக்காக கொண்டுள்ளது என்று ஷின்ஹுவா ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
வங்கதேச சுகாதாரம், குடும்ப நலன் அமைச்சர் சர்தார் மட் சகாவட் ஹொஸ்சைன், தலைநகர் டாக்காவிற்கு அருகில் உள்ள ஒரு சுகாதார வளாகத்தில் இயக்கத்தைத் தொடங்கி வைத்தார்.
அதிகமான தொற்று விகிதம் பதிவான நாட்டின் 18 மாவட்டங்களில் ஆறு மாதம் முதல் ஐந்து வயது வரையிலான குழந்தைகளை இந்த இயக்கம் உள்ளடக்குவதாக ஹொஸ்சைன் கூறினார்.
வரும் மே 3 முதல் வங்கதேசத்தின் மற்ற மாவட்டங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய நாடு தழுவிய நிலையில் தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசி இயக்கம் தொடங்கும் என்றும் அவர் அறிவித்தார்.
நோய் பரவலை உடனடியாகக் கட்டுப்படுத்தவும் அபாயத்திலுள்ள குழந்தைகளைப் பாதுகாக்கவும் நிபுணர்களின் பரிந்துரையின் பேரில் அவசர இயக்கம் தொடங்கப்படுவதாக அவர் கூறினார்.
சமீபத்தில் தட்டம்மை வழக்குகளும் நோயுடன் தொடர்புடைய மரணங்களும் அதிகரித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பொது சுகாதார சேவைகளின் தலைமை இயக்குநரகத்தின்படி, கடந்த சனிக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் சந்தேகிக்கப்படும் தட்டம்மையால் நான்கு கூடுதல் மரணங்கள் பதிவாகின.
இதனால் மொத்த மரண எண்ணிக்கை 98 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
May 26, 2026, 11:49 am
ஈரான் அமைதித் திட்டத்திற்காக ஆப்ரஹாம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட டிரம்ப் விரும்புகிறார்
May 26, 2026, 11:20 am
மத்திய கிழக்கில் பலமுனைப் போர்: அதிர்வலைகளில் சிக்கியுள்ளது உலகப் பொருளாதாரம்
May 26, 2026, 10:32 am
ஆப்பிரிக்காவை உலுக்கும் இபோலா: இப்போது ஐரோப்பாவுக்கும் பரவுமா?
May 25, 2026, 11:37 am
பிலிப்பைன்ஸில் கட்டிடம் இடிந்து விழுந்தது: உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்தது
May 25, 2026, 10:59 am
காங்கோவில் பதற்றம்: 2 இபோலா சிகிச்சை நிலையங்களுக்குத் தீ வைத்து கொளுத்திய மக்கள்
May 25, 2026, 9:44 am
பாகிஸ்தானில் ரயில் வெடிப்பில் 24 பேர் உயிரிழந்தனர்
May 24, 2026, 3:55 pm
இபோலா கிருமியால் ஆப்பிரிக்காவின் பிற நாடுகளுக்கும் ஆபத்து: சுகாதார அமைப்பு எச்சரிக்கை
May 24, 2026, 12:37 pm
கலிஃபோர்னியாவில் ரசாயனக் கசிவு: 40,000 மக்கள் வெளியேற உத்தரவு
May 23, 2026, 2:52 pm
