செய்திகள் மலேசியா
மனிதக் கடத்தல் கும்பலுக்கு 8,000 ரிங்கிட் லஞ்சம்: 20 மியான்மர் நாட்டவர் பிடிபட்டனர்
தும்பட்:
கடந்த வெள்ளியன்று நான்கு பெண்கள் உட்பட 20 மியான்மர் அன்னியர்களை (PATI) இங்கு சாபாங் எம்பாட்டில் உள்ள ஒரு வீட்டில் பொது செயல்பாட்டுப் படை (PGA) கைது செய்தது.
19 முதல் 36 வயதுக்கிடைப்பட்ட இந்த அன்னியர்கள் சட்டவிரோத வழிகள் மூலம் நாட்டிற்கு நுழைந்த பிறகு அந்த வீட்டில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
பி.ஜி.ஏ. தென்கிழக்கு பிரிகேட் கட்டளை அதிகாரி மூத்த உதவி ஆணையர் அஹ்மத் ராட்சி ஹுசைன், உழவு தகவல்களின் அடிப்படையில் இச் சோதனை நடைபெற்றதாக கூறினார்.
"சோதனையில் வீட்டின் வரவேற்பறையில் கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து சந்தேகநபர்களாலும் எந்தவொரு சட்டப்பூர்வ பயண ஆவணங்களையும் சமர்பிக்க முடியவில்லை.
"ஆரம்பக்கட்ட விசாரணையில் அவர்கள் மியான்மரிலிருந்து தாய்லாந்திற்குப் பயணமாகி, பின்னர் சட்டவிரோதமாக ஆற்று வழிகளைப் பயன்படுத்தி நாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட மனித கடத்தல் வலையமைப்பின் (முகவர்கள்) மூலம் மலேசியாவிற்கு நுழைந்ததாக நம்பப்படுகிறது.
"சம்பந்தப்பட்ட முகவர்களுக்கான கட்டணம் ஒவ்வொரு நபருக்கும் சுமார் RM8,000 என்று மதிப்பிடப்படுகிறது. மலேசியாவிற்கு நுழைவதன் நோக்கம் கட்டுமான தொழிலாளராக பணிபுரிவதாகும்" என்று நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர் தெரிவித்தார்.
அனைத்து சட்டவிரோத அன்னியர்களும் குடியேற்ற சட்டம் 1959/1963-ன் பிரிவு 6(1)(c)-ன் கீழ் மேலதிக விசாரணைக்காக தும்பட் மாவட்ட போலிஸ் தலைமையகத்தின் குற்ற விசாரணை பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டனர் என்று அஹ்ம்மத் ராட்சி கூறினார்.
இதற்கிடையே, கடந்த வெள்ளியன்று இங்கு அருகில் உள்ள ரந்தாவ் பஞ்சாங்கில் கம்போங் கேடாப் மீஜி சட்டவிரோத தளத்தை சுற்றி, தாய்லாந்து அன்னியர்களான ஒரு ஆணும் பெண்ணும் கைது செய்யப்பட்டனர்.
16, 17 வயதுடைய இரண்டு இளைஞர்களும் சட்டப்பூர்வமான பயண ஆவணங்களைச் சமர்பிக்க முடியாமல் மலேசியாவில் நுழைவதற்கான முத்திரையும் இல்லாமல் இருந்ததாக அஹ்ம்மத் ராட்சி கூறினார்.
"2024 ஆண்டு தொடக்கம் முதல் ஜொகூரில் உள்ள பாசிர் கூடாங்கில் ஒரு உணவகத்தில் சமையல்காரராக பணிபுரிவதாக சந்தேகநபர்கள் ஒப்புக்கொண்டனர்.
"இரண்டு கைதிகளும் பி.ஜி.ஏ. கொம்தாக் தாமான் பக்திக்குக் கொண்டுவரப்பட்டு, குடியேற்ற சட்டம் 1959/1963-ன் பிரிவு 5(2), பிரிவு 6(1)(c)-ன் கீழ் மேலதிக நடவடிக்கைக்காக பாசிர் மாஸ் போலிஸ் தலைமையகத்தின் குற்ற விசாரணை துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர்" என்று அவர் கூறினார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
April 6, 2026, 4:19 pm
மத்திய கிழக்கு பதற்றம்: கட்டணங்களை 40 சதவீதம் வரை உயர்த்தும் ஏர்ஏசியா எக்ஸ்
April 6, 2026, 3:42 pm
ஒருமுறை டீசல் நிரப்ப RM1,600 செலவா?: 5,000 தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி
April 6, 2026, 3:22 pm
குடியுரிமை பெறக் குறுக்கு வழி: சிக்கிய இந்தோனேசியத் தொழிலாளி
April 6, 2026, 3:09 pm
தனது சகாக்களைக் காயப்படுத்திய குற்றச்சாட்டை மறுத்த இராணுவ வீரர்
April 6, 2026, 2:44 pm
மலாக்காவில் வெடிகுண்டு சத்தம் கேட்டதால் பதற்றம்; அது வெறும் இடிதான்: மெட் மலேசியா
April 6, 2026, 2:43 pm
துன் டாய்ம்மின் மகன் வாக்குமூலம் அளிக்க எம்ஏசிசி தலைமையகத்திற்கு வந்தார்
April 6, 2026, 2:42 pm
எஸ்பிஎம் முடித்த மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டல்கள் மிகவும் அவசியமானது: ஸ்ரீ சங்கர்
April 6, 2026, 2:30 pm
