நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எஸ்பிஎம் முடித்த மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டல்கள் மிகவும் அவசியமானது: ஸ்ரீ சங்கர்

பிறை:

எஸ்பிஎம் முடித்த மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டல்கள் மிகவும் அவசியமானது.

பிறை கிராம சமூக மேலாண்மை மன்றத்தின் தலைவர் ஸ்ரீ சங்கர் இதனை கூறினார்.

எஸ்பிஎம் முடித்த மாணவர்கள் தங்களின் உயர் கல்வி, தொழில் திறன் கல்வி பாதைகளைத் திட்டமிடுவதற்குப் பயனளிக்கும் வகையில் சிறப்பு வழிகாட்டல் கருத்தரங்கு நடத்தப்பட்டது.

சுமார் 200 மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

இந்த ஒரு நாள் நிகழ்ச்சியில் தன்முனைப்பு உரைகள், உயர்கல்வி நிறுவனங்களில் தங்கள் படிப்பைத் தொடர்வதற்கான வாய்ப்புகளைப் பகிர்ந்து கொள்ளப்பட்டது.

மேலும்  கோலாலம்பூரிலிருந்து வருகை தந்த சிறப்புப் பேச்சாளர்களான டாக்டர் புனிதன், டாக்டர் சஞ்சய் ஆகியோருடனான கலந்துரையாடல் அமர்வுகள் இடம் பெற்றன.

இதுபோன்ற கருத்தரங்குகள் மாணவர்களின் உயர் கல்வி தேர்வுக்கு தெளிவான சிந்தனையை தரும் என்று அவர் கூறினார்.
முன்னதாக பினாங்கு வீட்டு வசதி, சுற்றுச்சூழல் ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தரராஜூ இக்கருத்தரங்கை தொடங்கி வைத்தார்.

மேலும் அவர், இளைஞர் மேம்பாட்டு முயற்சிகளுக்குத் தனது ஆதரவையும், எதிர்காலத்தின் அடித்தளமாகக் கல்வியின் முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்தினார்.

இதனிடையே டேர் டு கேர் இயக்கம்,  ஜேபிடபிள்யூகே காடூன் பெராய், ஏபிபிஜிஎம்எஸ்டிஜி, ஹஸ்னா அறவாயியம்,  எம்பிகேகே பெராய் உறுப்பினர்களின் வலுவான அர்ப்பணிப்பில் இக்கருத்தரங்கு நடைபெற்றது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset