நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

செராஸ் கராவோக்கே மையத்தில் வன்முறை: 50-க்கும் மேற்பட்ட முகமூடி நபர்கள் அதிரடித் தாக்குதல்

கோலாலம்பூர்: 

செராஸ் தாமான் ஷாமலினில் உள்ள ஒரு கராவோக்கே (KTV) பொழுதுபோக்கு மையம் 50-க்கும் மேற்பட்ட முகமூடி அணிந்த நபர்களால் தாக்கப்பட்டது.

1 நிமிடம் 11 வினாடி நீளமுள்ள வைரலான காணொலி பதிவில் இந்தச் சம்பவம் கண்டறியப்பட்டது. கறுப்பு உடை அணிந்து ஆயுதமேந்திய நபர்களின் குழு KTV வளாகத்திற்குள் நுழைவது காட்டப்பட்டது.

 லாரி ஒன்று KTV வளாகத்தின் வாயில் கதவை மோதி சேதப்படுத்தியது. பின்னர் அந்நபர்களின் குழு இடைவெளி வழியாக உள்ளே நுழைந்தது காணொலியில் கண்டறியப்பட்டது.

சந்தேகநபர்கள் இரும்பு, மரக்கட்டைகளை வைத்திருந்ததாகவும் பதிவு காட்டியது.

தற்போது சம்பவத்தின் நோக்கம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இது பழிவாங்கல், கருத்து வேறுபாடு அல்லது கடன் பிரச்சினையுடன் தொடர்புடையதா என்று செராஸ் மாவட்ட போலீஸ் தலைமையக (IPD) குழுக்கள் விசாரணை மேற்கொள்கின்றன. KTV வளாகத்தில் சில உபகரணங்கள் சந்தேகநபர்களால் சேதப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோலாலம்பூர் போலிஸ் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சஸ், சம்பவம் தொடர்பான புகார் பெறப்பட்டதைத் தொடர்ந்து இதை உறுதிப்படுத்தினார்.

"வழக்கு குற்றவியல் சட்டத்தின் பிரிவு 427, அதே சட்டத்தின் பிரிவு 148-ன் கீழ் வகைப்படுத்தப்படுகிறது.

"தற்போது சந்தேகநபர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றன" என்று அவர் கூறினார்.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset