நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிரபல செய்தியாளர் டத்தோ கரம் சிங் வாலியா காலமானார்

கோலாலம்பூர்:

நாட்டின் புகழ்பெற்ற சுற்றுச்சூழல் செய்தியாளர் டத்தோ கரம் சிங் வாலியா இன்று அதிகாலையில் காலமானார். 

அவரின் மறைவை தம்பியும், மீடியா பிரிமா செய்தி, நடப்பு விவகாரங்களுக்கான குழு நிர்வாக ஆசிரியருமான ஜஸ்பந்த் சிங் உறுதிப்படுத்தினார்.

1959ஆம் ஆண்டு பேர தெலுக் இந்தானில் முன்னாள் பஞ்சாபி சீக்கிய போலிஸ் அதிகாரிகள் குடும்பத்தில் பிறந்த டத்தோ கராம் சிங் வாலியா.

தேசிய தனியார் தொலைக்காட்சி நிலையமான TV3இல் ஒளிபரப்புப் செய்தியாளராக பணியாற்றினார். 

அவர் 1995 முதல் 2014-இல் ஓய்வு பெறும் வரை அங்கு பணியாற்றினார்.

மிகவும் செல்வாக்கு மிக்க சுற்றுச்சூழல் பத்திரிகையாளர் என்று அறியப்பட்ட இவர், குறிப்பாக மாசுபாடு, பொதுப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் நிலைத்தன்மையின் முக்கியத்துவம் போன்ற பிரச்சினைகளை முன்னிலைப்படுத்துவதில், தனது துணிச்சலான, பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய சிறப்பு அறிக்கைகளுக்காகப் பெயர் பெற்றவர்.

தனது தொழில் வாழ்க்கை முழுவதும், கராம் சிங் வாலியா TV3இல் வழங்கிய செய்திகள் மூலம் தேசிய ஒளிபரப்பு உலகில் மிகவும் அறியப்பட்ட முகங்களில் ஒருவராகத் திகழ்ந்தார். 

அவரது தனித்துவமான வழங்கல் பாணி உறுதியானதாகவும், அதிகாரப்பூர்வமானதாகவும், பார்வையாளர்கள் எளிதில் நினைவில் கொள்ளக்கூடியதாகவும் இருந்தது.

மேலும் அவர், 2004, 2005, 2006, 2007-ஆம் ஆண்டுகளில் சிறந்த சுற்றுச்சூழல் தொலைக்காட்சி செய்தியாளர் பிரிவில் மலேசிய பத்திரிகை நிறுவனத்தின்  விருதையும், ஸ்ரீ அங்கசா விருதுகளில் இரண்டு முறை சிறந்த தொலைக்காட்சிப் பத்திரிகையாளர் விருதையும் வென்றவர் ஆவார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset