நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சுவையும் சேவையும் தரமாக இருந்தால் உணவகத் தொழிலில் தோல்வி காண முடியாது: டத்தோஸ்ரீ சரவணன்

கிள்ளான்:

சுவையும் சேவையும் தரமாக இருந்தால் உணவகத் தொழிலில் தோல்வி காண முடியாது.

தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மஇகா துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை கூறினார்.

கிள்ளானில் இன்று Vaalai N Spice Hub என்ற பாரம்பரிய சுவை மிக்க வாழை இலை உணவகத்தைத் திறந்து வைத்ததில் மகிழ்ச்சி.

அதன் உரிமையாளர் செல்வாவிற்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துகள்.

தமிழர் உணவு மரபு என்பது வெறும் பசியாறும் வழக்கம் அல்ல, அது உடலையும் மனதையும் சமநிலைப்படுத்தும் வாழ்வியல் நெறியாகும்.

அறுசுவை உணவு எனப்படும் இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, உவர்ப்பு, துவர்ப்பு ஆகிய ஆறு சுவைகளும் உடலுக்குத் தேவையான சத்துக்களை அளித்து ஆரோக்கியமான வாழ்வை உருவாக்குகின்றன. 

அந்த வகையில், வாழை இலை உணவு பரிமாறும் பண்பாட்டை முன்னிறுத்தி, இயற்கைச் சுவையையும் பாரம்பரிய சமையல் முறைகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியாக இந்த உணவகம் உருவாகியுள்ளது என்பது பெருமைக்குரியது.  

சுவையும் சேவையும் தரமாக இருந்தால் உணவகத் தொழிலில் தோல்வி காண முடியாது.

ஒருவேளை உணவகத் தொழிலில் தோல்வி கண்டால் அதற்கு வேறு காரணங்களாக இருக்கும்.

ஆக  Vaalai N Spice Hub அறுசுவை நிறைந்த ஆரோக்கியமான உணவுகளை வழங்கி, கிள்ளான் மக்களிடையே சிறந்த வரவேற்பைப் பெற்று, வளர்ச்சியின் உச்சிக்குச் சென்று விளங்கட்டும் என மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset