நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பண்டார் புக்கிட் திங்கி மஇகா கிளை சார்பில் எஸ்பிஎம் மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்: சசிதரன்

கிள்ளான்:

பண்டார் புக்கிட் திங்கி மஇகா கிளை சார்பில் எஸ்பிஎம் தேர்வில் சிறப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

அக்கிளையின் தலைவர் சசிதரன் இதனை கூறினார்.

ஜாலான் கிம் சுவாங், பண்டார் புக்கிட் திங்கி கிளைகளின் ஆண்டுப் பொதுக் கூட்டம், பாண்டமரானில் உள்ள யாலிம் உணவகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தை நியமிக்கப்பட்ட தேர்தல் அதிகாரிகளான சிவசுப்பிரமணியம், சதாசிவம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்த அர்த்தமுள்ள நிகழ்ச்சியில் எஸ்பிஎம் தேர்வுகளில் 8 ஏ,  அதற்கும் மேல் பெற்ற நான்கு சிறந்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

இம்மாணவர்களின் சாதனைகளைப் பாராட்டும் விதமாக, ஒவ்வொருவருக்கும் 500 ரிங்கிட் வழங்கப்பட்டது என்று அவர் கூறினார்.

முன்னதாக  தொகுதி தலைவர் தர்மலிங்கம், கிள்ளான் தொகுதியின் பல கிளைத் தலைவர்கள், சிலாங்கூர் மஇகாவின் டி. சேகர், செயற்குழு உறுப்பினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset