நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெருநாள் திறந்த இல்ல உச்சரிப்புகள் மக்களின் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்துகிறது

பாகான் டத்தோ:

பெருநாள் திறந்த இல்ல உச்சரிப்புகள் மக்களின் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்துகிறது.

மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்எஸ் தனேந்திரன் கூறினார்.

பாகான் டத்தோ நகரில் நடைபெற்ற துணைப் பிரதமரின் டத்தோஸ்ரீ அஹ்மத் ஜாஹித் ஹமிடியின் திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்டேன்.

நிகழ்ச்சி முழுவதும் அவர் விருந்தினர்களை அன்பாகவும் கனிவாகவும் வரவேற்றார்.

ஒவ்வொரு விருந்தினரும் ஒரு இனிமையான புன்னகை, நட்பு வார்த்தைகளுடன் வரவேற்கப்பட்டனர்.

முதியவர்கள், இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் என அனைத்து வயதினரும் துணைப் பிரதமருடன் கைகுலுக்கி மகிழ்ந்தனர்.

குறிப்பாக பல்லின மக்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

இது பல்லின மக்களின் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்தும் ஒரு களமாகவும் மாறியது என்று அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் பேரா மந்திரி புசார்  டத்தோஸ்ரீ சாரானி முகமது, அம்னோ உச்சமன்ற உறுப்பினர்கள்,
பாகன் டத்தோ மக்கள் சக்தி கட்சியின் தொகுதித் தலைவர் சாமி முருகன், மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset