செய்திகள் மலேசியா
தொகுதி தலைவர் பதவி என்பது பொதுத் தேர்தலில் வேட்பாளராவதற்கு உத்தரவாதம் அல்ல: டத்தோஸ்ரீ அன்வார்
ஜொகூர்பாரு:
கெஅடிலான் கட்சியின் தொகுதி தலைவர் பதவி என்பது பொதுத் தேர்தலில் வேட்பாளராவதற்கு உத்தரவாதம் அல்ல.
பிரதமரும் அக்கட்சியின் தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இவ்வாறு கூறினார்.
வரவிருக்கும் பொதுத் தேர்தலில் தொகுதி தலைவர், மகளிர் தலைவர் அல்லது இளைஞர் தலைவர் பதவிகளை வகிப்பது வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்குத் தானாகவே உத்தரவாதம் அளிக்காது.
தொகுதி மட்டத்தில் போதுமான பலம் இல்லாமலும், தேர்தலை எதிர்கொள்வதில் திருப்திகரமான பணித்திறனை வெளிப்படுத்தத் தவறினாலும், வேட்பாளரின் நியமனக் கடிதத்தில் தாம் கையொப்பமிட மாட்டேன்.
வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான முக்கிய அளவுகோல்கள் அர்ப்பணிப்பு, உயர் பணி ஈடுபாடு, அடிமட்ட அளவில் உறுதியான ஆதரவின் மூலம் கட்சியை வெல்லும் தனிநபரின் திறன் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை.
தொகுதியில் நீங்கள் சிறப்பாகச் செயல்படவில்லை என்றால், கோரிக்கைகளை வைக்காதீர்கள்.
மனக்கசப்பு கொள்வது, எதிர்ப்புத் தெரிவிக்க விரும்புவது, கட்சியை விட்டு வெளியேற விரும்புவது போன்ற பல அனுபவங்கள் எங்களுக்கு உண்டு; நாங்கள் அனைவரும் அதைக் கடந்து வந்திருக்கிறோம்.
ஆதரவின் பலமே இறுதி முடிவாகும்.
உழைத்து, கட்சியை வெல்லக்கூடியவர்களே தானாகவே வேட்பாளர்களாக ஆகிறார்கள் என்று ஜொகூர் கெஅடிலான் கூட்டத்தில் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 5, 2026, 10:26 pm
ரமணனும் ஹசானும் வெளிப்படையாக வாய் வார்த்தைகளால் மோதிக் கொண்டதால் கெஅடிலான் மாநாட்டில் குழப்பம்
April 5, 2026, 10:25 pm
ஹம்ஸா தேசியக் கூட்டணி கட்சியின் உறுப்பினர் அல்ல: தக்கியூடின
April 5, 2026, 10:23 pm
பெருநாள் திறந்த இல்ல உச்சரிப்புகள் மக்களின் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்துகிறது
April 5, 2026, 10:22 pm
பண்டார் புக்கிட் திங்கி மஇகா கிளை சார்பில் எஸ்பிஎம் மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்: சசிதரன்
April 5, 2026, 5:05 pm
கெஅடிலான் கட்சியில் இரு முகாம்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை: டத்தோஸ்ரீ ரமணன் அதிரடி
April 5, 2026, 4:21 pm
