நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குடிவரவுச் சட்ட விதிமீறல்: விசா இன்றி தங்கியிருந்த 4 வெளிநாட்டினருக்குக் கடும் அபராதம்

பாசிர் மாஸ்: 

மலேசியாவில் விசா காலம் முடிந்தும் தங்கியிருந்தது, சட்டவிரோதமாக ஊடுருவியது ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக, மூன்று வங்கதேசத்தவர்கள், ஒரு தாய்லாந்து நாட்டவர் மீது இன்று பாசிர் மாஸ் அமர்வு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. நீதிபதி சுல்கிப்ளி அப்துல்லா முன்னிலையில் வாசிக்கப்பட்ட இக்குற்றச்சாட்டுகளை நான்கு பேரும் ஒப்புக்கொண்டனர்.

குடிவரவுச் சட்டத்தின் கீழ், முறையான ஆவணங்களின்றி தங்கியிருந்த 25, 28, 38 வயதுடைய மூன்று வங்கதேச இளைஞர்களுக்குத் தலா RM10,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது. 

இந்த அபராதத்தைச் செலுத்தத் தவறினால் அவர்களுக்கு நான்கு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என நீதிபதி உத்தரவிட்டார். கடந்த மார்ச் 29-ஆம் தேதி மாநில குடிவரவுத் துறையினர் நடத்திய அதிரடிச் சோதனையின்போது இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

மேலும், சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்த குற்றத்திற்காக 49 வயதுடைய தாய்லாந்து நாட்டவருக்கு RM4,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் அவருக்கு இரண்டு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் யாரும் முன்னிலையாகவில்லை.

அரசுத் தரப்பு துணை வழக்கறிஞர் சித்தி கைதிஜா கைருதீன் இந்த வழக்கைத் தலைமை தாங்கி நடத்தினார். நாட்டின் எல்லைப் பாதுகாப்பு, குடிவரவுச் சட்டங்களை மீறுபவர்களுக்கு எதிராகத் தொடர்ந்து கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை இந்தத் தீர்ப்பு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset