செய்திகள் மலேசியா
பள்ளி வேன் ஏறி மரணமடைந்த 7 வயது சிறுவன் உதயகுமாருக்கு நீதி கிடைக்க வேண்டும்: ஸ்ரீ ரமேஷ்
பத்துகேவ்ஸ்:
பள்ளி வேன் ஏறி மரணமடைந்த 7 வயது சிறுவன் உதயகுமாருக்கு நீதி கிடைக்க வேண்டும்.
மலேசிய தமிழர் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஸ்ரீ ரமேஷ் இதனை கூறினார்.
உதயகுமார் பத்துமலை தமிழ்ப்பள்ளியில் பயின்று வருகிறார்.
பத்துகேவ்ஸ் கம்போங் லட்சுமணாவில் உள்ள அறவாரியத்திற்கு சொந்தமான வேனில் தான் அவர் பள்ளிக்கு சென்று வருவார்.
இந்நிலையில் கடந்த மார்ச் 30ஆம் தேதி அவர் பள்ளியில் இருந்து சம்பந்தப்பட்ட அறவாரியத்திற்கு வந்துள்ளார்.
அங்கு வேனில் இருந்து இறங்கி கட்டிடத்திற்குள் செல்வதற்கு முன் சம்பந்தப்பட்ட பள்ளி வேன் அவரை மோதியது.
குறிப்பாக வேனின் டயர்கள் அவர் மீது ஏறி இறங்கியுள்ளது.
இதனால் உதயகுமார் கடுமையான காயங்களுக்கு இலக்காகி மரணம் அடைந்தார்.
உதயகுமாரின் இந்த மரணத்திற்கு சம்பந்தப்பட்ட அறவாரியம், வேன் ஓட்டுனரின் அலட்சிமும் கவனம் குறைவும் தான் முக்கிய காரணமாகும்.
ஆனால் சம்பந்தப்பட்ட வேன் ஓட்டுனர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அதே வேளையில் சம்பந்தப்பட்ட அறவாரியத்தினர் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
இதன் அடிப்படையில் தான் உதயகுமார் குடும்பத்தின் சார்பில் நாங்கள் இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ளோம்.
இந்த விபத்து குறித்து போலீஸ் அதிகாரிகளுடன் மீண்டும் புகார்கள் செய்யப்படும்.
அதே வேளையில் அறவாரியத்தை சேர்ந்த பொறுப்பாளர்கள் வேன் ஓட்டுநர் உட்பட அனைவரும் இந்த விபத்தின் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர வேண்டும்.
இதுவே எங்களின் கோரிக்கை என்று ஸ்ரீ ரமேஷ் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 5, 2026, 10:26 pm
ரமணனும் ஹசானும் வெளிப்படையாக வாய் வார்த்தைகளால் மோதிக் கொண்டதால் கெஅடிலான் மாநாட்டில் குழப்பம்
April 5, 2026, 10:25 pm
ஹம்ஸா தேசியக் கூட்டணி கட்சியின் உறுப்பினர் அல்ல: தக்கியூடின
April 5, 2026, 10:23 pm
பெருநாள் திறந்த இல்ல உச்சரிப்புகள் மக்களின் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்துகிறது
April 5, 2026, 10:22 pm
பண்டார் புக்கிட் திங்கி மஇகா கிளை சார்பில் எஸ்பிஎம் மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்: சசிதரன்
April 5, 2026, 5:05 pm
கெஅடிலான் கட்சியில் இரு முகாம்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை: டத்தோஸ்ரீ ரமணன் அதிரடி
April 5, 2026, 4:21 pm
