செய்திகள் மலேசியா
கிள்ளானில் நள்ளிரவு கொடூரம்: இரும்புத் தடியால் அடித்துக் கொல்லப்பட்ட பாதுகாப்பு அதிகாரி
கிள்ளான்:
பண்டார் புக்கிட் ராஜா பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தின் பாதுகாப்புச் சாவடியில் ஏற்பட்ட மோதலில், உள்ளூர் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். இன்று அதிகாலை சுமார் 1 மணியளவில் நிகழ்ந்த இந்தத் தாக்குதலில், மர்ம நபர் ஒருவர் கனமான பொருளைக் கொண்டு தாக்கியதில் அந்த அதிகாரி பலத்த காயமடைந்தார்.
தாக்குதலுக்குள்ளான அதிகாரி உடனடியாக ஷா ஆலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும், அங்கு சிகிச்சை பலனின்றி அதிகாலை 4.18 மணியளவில் அவர் உயிரிழந்ததாக வடக்கு கிள்ளான் மாவட்டப் போலிஸ் தலைவர் உதவி ஆணையர் எஸ். விஜய ராவ் உறுதிப்படுத்தியுள்ளார்.
இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தகராறே இந்த விபரீத முடிவுக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக, 40 வயது மதிக்கத்தக்க உள்ளூர் நபர் ஒருவரைப் போலிஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் கார் பூட்டு இரும்புத் தடி (Car steering lock) ஒன்றையும் போலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். கைதான நபருக்கு ஏற்கனவே எட்டு குற்றப் பின்னணிகளும், இரண்டு போதைப்பொருள் தொடர்பான வழக்குகளும் இருப்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
தற்போது இந்த வழக்கு தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302-ன் கீழ் கொலை வழக்காகப் பதிவு செய்யப்பட்டுத் தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. பொது இடங்களில் இத்தகைய வன்முறைகள் நிகழ்வது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
April 5, 2026, 5:05 pm
கெஅடிலான் கட்சியில் இரு முகாம்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை: டத்தோஸ்ரீ ரமணன் அதிரடி
April 5, 2026, 4:21 pm
சாலையோரம் கவிழ்ந்து பற்றி எரிந்த லாரி: 55 வயது ஓட்டுநர் பலி
April 5, 2026, 3:30 pm
சுவையும் சேவையும் தரமாக இருந்தால் உணவகத் தொழிலில் தோல்வி காண முடியாது: டத்தோஸ்ரீ சரவணன்
April 5, 2026, 3:24 pm
குடிவரவுச் சட்ட விதிமீறல்: விசா இன்றி தங்கியிருந்த 4 வெளிநாட்டினருக்குக் கடும் அபராதம்
April 5, 2026, 3:02 pm
பள்ளி வேன் ஏறி மரணமடைந்த 7 வயது சிறுவன் உதயகுமாருக்கு நீதி கிடைக்க வேண்டும்: ஸ்ரீ ரமேஷ்
April 5, 2026, 2:58 pm
