நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

லங்காவியில் நனவான உமைராவின் கனவு: புற்றுநோயுடன் போராடும் சிறுமிக்குக் கிடைத்த நெகிழ்ச்சிப் பரிசு

லங்காவி: 

மூளைப் புற்றுநோயின் நான்காம் நிலையால் பாதிக்கப்பட்டுள்ள 12 வயது சிறுமி நூர் உமைராவின் நீண்ட நாள் கனவான லங்காவி சுற்றுலா, பலரது உதவியுடன் நனவாக்கப்பட்டுள்ளது. 

வறுமையின் காரணமாகத் தனது மகளின் ஆசையை நிறைவேற்ற முடியாமல் தவித்த தாய் நூர் ஷஹிரா, தற்போது தனது மகள் மகிழ்ச்சியில் திளைப்பதைக் கண்டு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார்.

கடந்த 2020-ஆம் ஆண்டு, தனது ஆறாவது வயதில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட உமைராவுக்கு, தற்போது மருத்துவ சிகிச்சைகள் பலனளிக்காத நிலையில் அவர் ஒரு தற்காலிகப் பராமரிப்பு நோயாளி என அறிவிக்கப்பட்டுள்ளார். 

தொலைக்காட்சியில் மட்டுமே பார்த்த பெங்குவின்களை நேரில் பார்க்க வேண்டும் என்ற உமைராவின் கடைசி ஆசை குறித்த செய்தி ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து, கெடா மாநில சுற்றுலாத்துறை, பல்வேறு தரப்பினர் இணைந்து இந்தச் சுற்றுப்பயணத்திற்கு ஏற்பாடு செய்தனர்.

இந்தச் சுற்றுலாவின் போது உமைரா தனது குடும்பத்தினருடன் லங்காவி ஸ்கைபிரிட்ஜ், வனவிலங்கு பூங்கா ஆகிய இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 

குறிப்பாக, அண்டர்வாட்டர் வேர்ல்ட் (Underwater World) பகுதியில் பெங்குவின்களை நேரில் கண்டபோது உமைராவின் முகத்தில் மட்டற்ற மகிழ்ச்சி நிலவியது. சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த போதிலும், பலரது அன்பினாலும் வரவேற்பினாலும் அவர் மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டார்.

கெடா மாநில சுற்றுலாத்துறை செயற்குழு உறுப்பினர் டத்தோ முஹம்மத் சாலே சைடின், பல முக்கியப் பிரமுகர்கள் உமைராவை நேரில் சந்தித்து வரவேற்றனர். 

"சேமிப்புப் பணம் முழுவதையும் சிகிச்சைக்கே செலவிட்டதால் எங்களால் மகளை இங்கு அழைத்து வர முடியவில்லை; இன்று என் மகளின் கனவு நனவாக உதவிய அனைவருக்கும் கோடி நன்றிகள்" என உமைராவின் தாய் உருக்கமாகத் தெரிவித்தார்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset