செய்திகள் மலேசியா
காஜாங்கில் பரபரப்பு: எம்.ஆர்.டி நிலையத்தில் பாலியல் அத்துமீறல்
காஜாங்:
காஜாங் எம்.ஆர்.டி (MRT) நிலையத்தின் வெளியே பாலியல் தொல்லை கொடுத்ததாகச் சந்தேகிக்கப்படும் 24 வயதுடைய உள்ளூர் இளைஞர் ஒருவரைப் போலிஸார் நேற்று அதிரடியாகக் கைது செய்தனர்.
சமூக ஊடகமான 'த்ரெட்ஸ்' (Threads) தளத்தில் இது தொடர்பான காணொலி வைரலானதைத் தொடர்ந்து, பண்டார் பாரு பாங்கியில் உள்ள அவரது இல்லத்திலேயே வைத்து போலிஸார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இந்தச் சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள காஜாங் மாவட்டப் போலிஸ் தலைவர் உதவி ஆணையர் நஸ்ரோன் அப்துல் யூசோப், கைதான இளைஞர் மேலதிக விசாரணைக்காகக் காஜாங் நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு தடுப்புக் காவல் உத்தரவு பெறப்படும் என்று தெரிவித்தார்.
கடந்த வியாழக்கிழமை காலை முதல் வைரலான 23 விநாடிகள் கொண்ட அந்த காணொலி ஆதாரத்தின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கே சென்று போலிஸார் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்தக் குற்றச்செயல் தொடர்பில் தகவல் தெரிந்த பொதுமக்கள், விசாரணை அதிகாரி சார்ஜன் நூர் அதிக்கா அன்வாரை 013-7948922 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விசாரணைக்கு உதவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பெண்களுக்கு எதிரான இத்தகைய அநாகரீகச் செயல்கள் பொது இடங்களில் அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு, பொதுமக்களின் பாதுகாப்பு குறித்துப் போலிஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
April 5, 2026, 5:05 pm
கெஅடிலான் கட்சியில் இரு முகாம்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை: டத்தோஸ்ரீ ரமணன் அதிரடி
April 5, 2026, 4:21 pm
சாலையோரம் கவிழ்ந்து பற்றி எரிந்த லாரி: 55 வயது ஓட்டுநர் பலி
April 5, 2026, 3:30 pm
சுவையும் சேவையும் தரமாக இருந்தால் உணவகத் தொழிலில் தோல்வி காண முடியாது: டத்தோஸ்ரீ சரவணன்
April 5, 2026, 3:24 pm
குடிவரவுச் சட்ட விதிமீறல்: விசா இன்றி தங்கியிருந்த 4 வெளிநாட்டினருக்குக் கடும் அபராதம்
April 5, 2026, 3:02 pm
பள்ளி வேன் ஏறி மரணமடைந்த 7 வயது சிறுவன் உதயகுமாருக்கு நீதி கிடைக்க வேண்டும்: ஸ்ரீ ரமேஷ்
April 5, 2026, 2:58 pm
