செய்திகள் மலேசியா
இப்போதைக்கு பொதுத் தேர்தல் இல்லை; அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பைத் தொடர வேண்டும்: பிரதமர்
ஈப்போ:
நாட்டில் இப்போதைக்கு பொதுத் தேர்தல் நடைபெறாது என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சூசகமாகத் தெரிவித்தார்.
உலகளாவிய எரிசக்தி நெருக்கடிக்குத் தீர்வு காண்பதில் அனைத்துக் கட்சிகளும் தொடர்ந்து ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
தற்போதைய நிலைமை அரசியல் மோதல்களைப் பற்றியது அல்ல.
மாறாக அனைத்துக் கட்சிகளும் பொறுமையுடன் இருந்து, நாட்டின் சவால்களை எதிர்கொள்வதற்கான முயற்சிகளில் கவனம் செலுத்த வேண்டும்.
இது ஒரு அரசியல் பிரச்சினை அல்ல. இது அரசியல் மோதல்களைப் பற்றியதோ, ஒருவருக்கொருவர் எதிரிகளாக இருப்பதைப் பற்றியதோ அல்ல.
குறிப்பாக இன்னும் ஓரிரு மாதங்களில் தேர்தல்கள் நடைபெறாது.
அனைவரும் சிறிது காலம் பொறுமையாக இருங்கள் என்று பிரதமர் கூறினார்.
இது தேர்தல் நேரம் இல்லை. இப்போது வேலைக்கான நேரம்.
அரசியல் போதும், விழித்தெழுங்கள், நம் நாட்டைக் காப்பாற்றுங்கள் என்று அவர் பேராக் 2026 சமூக நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தபோது கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 5, 2026, 5:05 pm
கெஅடிலான் கட்சியில் இரு முகாம்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை: டத்தோஸ்ரீ ரமணன் அதிரடி
April 5, 2026, 4:21 pm
சாலையோரம் கவிழ்ந்து பற்றி எரிந்த லாரி: 55 வயது ஓட்டுநர் பலி
April 5, 2026, 3:30 pm
சுவையும் சேவையும் தரமாக இருந்தால் உணவகத் தொழிலில் தோல்வி காண முடியாது: டத்தோஸ்ரீ சரவணன்
April 5, 2026, 3:24 pm
குடிவரவுச் சட்ட விதிமீறல்: விசா இன்றி தங்கியிருந்த 4 வெளிநாட்டினருக்குக் கடும் அபராதம்
April 5, 2026, 3:02 pm
பள்ளி வேன் ஏறி மரணமடைந்த 7 வயது சிறுவன் உதயகுமாருக்கு நீதி கிடைக்க வேண்டும்: ஸ்ரீ ரமேஷ்
April 5, 2026, 2:58 pm
