நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆலய நிதியில் முறைகேடு: முன்னாள் தலைவர் கைது

ஷாஆலம்:

ஆலய நிதியிலிருந்து மொத்தம் 50,000 ரிங்கிட் கையாடல் செய்ததாக சந்தேகத்தின் பேரில், சிலாங்கூரில் உள்ள ஒரு ஆலயத்தின் முன்னாள் தலைவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் எம்ஏசிசி கைது செய்துள்ளது.

70 வயதுகளில் உள்ள அந்த சந்தேக நபர், கடந்த வியாழக்கிழமை பிற்பகல் சுமார் 3 மணியளவில் சிலாங்கூர் எம்ஏசிசி அலுவலகத்தில் வாக்குமூலம் அளிக்க வந்தபோது கைது செய்யப்பட்டார்.

ஆலயத்தை பழுதுபார்க்கும் நோக்கத்திற்காக, ஆலோசனை சேவைகளுக்காக மொத்தம் 50,000 ரிங்கிட் கட்டணம் கோரி ஒரு ரசீதைச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும்   கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்ட மற்றொரு நபருக்கு அந்த சந்தேக நபர் உடந்தையாக இருந்துள்ளார்.

கடந்த 2021 நவம்பரில் இந்தச் செயலைச் செய்ததாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இருப்பினும், அந்தப் பணி ஒருபோதும் மேற்கொள்ளப்படவில்லை.

அது ஆலய நிர்வாகத்தைக் குழப்புவதற்கான ஒரு தந்திரம் மட்டுமே என்று நம்பப்படுவதாக அவர் மேலும் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset