நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அறிவியல், கணிதப் படங்களில் ஏ எடுக்கும் மாணவர்கள்நன்னெறி பாடத்தில் தேர்ச்சி பெறுவது இல்லை; சதி நடக்கிறதா?: சுரேன் கந்தா கேள்வி

கோலாலம்பூர்:

அறிவியல், கணிதப் படங்களில் ஏ எடுக்கும் மாணவர்கள்நன்னெறி பாடத்தில் தேர்ச்சி பெறுவது இல்லை.

இதில் சதி ஏதும் நடக்கிறதா என்று ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் தலைமை இயக்குநர் சுரேன் கந்தா கேள்வி எழுப்பினார்.

கடந்தாண்டு எஸ்பிஎம் தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியாகின.
இதில் பல மாணவர்கள் சிறப்பு தேர்ச்சி பெற்று சாதித்துள்ளனர். அதே வேளையில் பல மாணவர்கள் சிறந்த தேர்ச்சியையும் பெறவில்லை.

எது எப்படி இருந்தாலும் இந்த தேர்வு முடிபோடு வாழ்க்கை முடிந்து விடாது. வாழ்க்கை இன்னும் சாதிக்க எவ்வளவோ உள்ளது.

ஆக எஸ்பிஎம் தேர்வு முடிவுகளை வைத்து அடுத்த என்ன செய்ய முடியும் என்று மாணவர்கள் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.

இந்நிலையில் எஸ்பிஎம் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஸ்ரீ முருகன் கல்வி நிலைய மாணவர்கள் இன்று சிறப்பிக்கப்பட்டனர்.

இம்மாணவர்கள் அனைவரும் சிரமப்பட்டு படித்து இன்று சாதித்துள்ளனர். அவர்களுக்கு எனது பாராட்டுகள் என்று சுரேன் கந்தா கூறினார்.

இதனிடையே அனைத்து படங்களிலும் ஏ± எடுத்தால் மெட்ரிகுலேஷன் வாய்ப்பு கிடைக்கும் என அரசாங்கம் அறிவித்தது.

இதனால் மெட்ரிகுலேஷன் வாய்ப்பை பெற வேண்டும் என  மாணவர்கள் பல சிரமங்களுக்கு மத்தியில் படிக்கின்றனர்.

ஆனால் அறிவியல், கணிதப் படங்களில் ஏ எடுக்கும் மாணவர்கள் நன்னெறி பாடத்தில் தேர்ச்சி பெறுவது இல்லை.

இதனால் அம்மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷன் கல்வி வாய்ப்பு கிடைப்பது இல்லை.

ஆக மாணவர்கள் ஏன் நன்னெறி பாடத்தில் தேர்வு பெறுவது இல்லை என்பது குறித்து ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் ஆய்வுகளை நடத்தவுள்ளது.

இந்த ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் கல்வியமைச்சரை நாங்கள் சந்திப்போம் என்று சுரேன் கந்தா கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset