செய்திகள் மலேசியா
ஜொகூரில் சுழற்காற்றின் சீற்றம்: மேற்கூரைகள் பெயர்ந்து விழுந்ததில் 10 கார்கள் உருக்குலைவு
ஜொகூர் பாரு:
கூலாய் பகுதியில் உள்ள தெமெங்கொங் அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று மாலை வீசிய பலத்த சுழற்காற்றினால் ஆறு குடும்பங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மாலை 5 மணியளவில் நிகழ்ந்த இந்தச் சீற்றத்தின்போது, குடியிருப்புகளின் மேற்கூரைகள் காற்றில் தூக்கி வீசப்பட்டதில், கீழே நிறுத்தப்பட்டிருந்த சுமார் 10 கார்கள் பலத்த சேதமடைந்தன.
இந்த விபத்தின்போது வீட்டில் தனியாக இருந்த 62 வயதான ரோஸ்னா சர்க்காவி எனும் இல்லத்தரசி, பெரும் சத்தத்துடன் வீட்டின் வரவேற்பறை, படுக்கையறையின் கூரைகள் பெயர்ந்து விழுந்ததாகக் கண்ணீருடன் தெரிவித்தார்.
சுமார் 15 நிமிடங்கள் நீடித்த இந்தச் சீற்றத்தின்போது, மழைநீர் வீட்டிற்குள் புகுந்ததால் அங்கிருந்த தளபாடங்கள், மின்சாதனங்கள் சேதமடைந்து சுமார் RM3,000 ரிங்கிட் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மின் கசிவு அபாயம் கருதி உடனடியாக மின் இணைப்புகளைத் துண்டித்ததாகவும், தற்போது பாதுகாப்பு கருதி தனது மகளின் வீட்டில் தஞ்சமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதோடு, பலர் தற்காலிகமாக வீடுகளை இழந்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற செனாய் மாநில சட்டமன்ற உறுப்பினர் வோங் போர் யாங், கூலாய் நாடாளுமன்ற உறுப்பினர் தியோ நீ சிங் ஆகியோர் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அவசர உதவிகளை வழங்கினர்.
பாதிக்கப்பட்டவர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்களை ஏற்பாடு செய்யவும், வீடுகளைச் சீரமைப்பது குறித்து மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்படும் எனவும் அவர்கள் உறுதி அளித்துள்ளனர்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
April 5, 2026, 5:05 pm
கெஅடிலான் கட்சியில் இரு முகாம்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை: டத்தோஸ்ரீ ரமணன் அதிரடி
April 5, 2026, 4:21 pm
சாலையோரம் கவிழ்ந்து பற்றி எரிந்த லாரி: 55 வயது ஓட்டுநர் பலி
April 5, 2026, 3:30 pm
சுவையும் சேவையும் தரமாக இருந்தால் உணவகத் தொழிலில் தோல்வி காண முடியாது: டத்தோஸ்ரீ சரவணன்
April 5, 2026, 3:24 pm
குடிவரவுச் சட்ட விதிமீறல்: விசா இன்றி தங்கியிருந்த 4 வெளிநாட்டினருக்குக் கடும் அபராதம்
April 5, 2026, 3:02 pm
பள்ளி வேன் ஏறி மரணமடைந்த 7 வயது சிறுவன் உதயகுமாருக்கு நீதி கிடைக்க வேண்டும்: ஸ்ரீ ரமேஷ்
April 5, 2026, 2:58 pm
