நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இனவாதத்தை ஊக்குவிக்கும் சீயோனிச அரசு: பாலஸ்தீன உரிமைகளுக்காக மீண்டும் குரல் கொடுத்த மலேசியா

கோலாலம்பூர்: 

பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேலிய சீயோனிச ஆட்சி கொண்டுவந்துள்ள புதிய கட்டாய மரண தண்டனைச் சட்டத்தை மலேசியா வன்மையாகக் கண்டித்துள்ளது. 

இந்தச் சட்டமானது பாலஸ்தீனியர்களுக்கு எதிரான நேரடிப் பாகுபாடு என்றும், நீதித்துறை சுதந்திரத்தைப் பறிக்கும் செயல் என்றும் மலேசிய வெளியுறவு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் சாடியுள்ளது.

இனம், தேசிய அடையாளத்தின் அடிப்படையில் தனிநபர்களை இலக்கு வைக்கும் இத்தகைய சட்டங்கள், சர்வதேச மனிதநேயச் சட்டங்களையும் நான்காவது ஜெனிவா உடன்படிக்கையையும் அப்பட்டமாக மீறுவதாக மலேசியா சுட்டிக்காட்டியுள்ளது. 

பாலஸ்தீன ஆக்கிரமிப்பு நிலப்பகுதிகளில் நிலவும் இன ஒதுக்கல் முறையை மேலும் வலுப்படுத்தவே இஸ்ரேல் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக மலேசியா குற்றஞ்சாட்டியுள்ளது.

பாலஸ்தீனியக் கைதிகள் அனுபவித்து வரும் சித்திரவதைகள், மனிதாபிமானமற்ற நடத்தைகள், அடிப்படை உரிமைகள் மறுப்பு குறித்த நம்பகமான தகவல்கள் கவலையளிப்பதாகத் தெரிவித்துள்ள மலேசியா, இக்கட்டான சூழலில் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக சர்வதேச சமூகம் ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

பாலஸ்தீனியர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை உடனடியாக நிறுத்தவும், இஸ்ரேலின் இச்செயல்களுக்குப் பொறுப்புக்கூறச் செய்யவும் சர்வதேச நாடுகள் தீர்க்கமான கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மலேசியா கோரிக்கை விடுத்துள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset