செய்திகள் உலகம்
இஸ்லாமிய புரட்சிப்படை இரு விமானங்களை சுட்டு வீழ்த்தியதன் எதிரொலி: 48 மணி நேரம் போரை நிறுத்திக்கொள்ள அமெரிக்க வேண்டுகோள்: நிராகரித்த ஈரான்
தெஹ்ரான்:
அமெரிக்கா முன்மொழிந்த 48 மணி நேர போர் நிறுத்தத் திட்டத்தை ஈரான் நிராகரித்துவிட்டதாக அந்நாட்டின் ‘ஃபார்ஸ்’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 28ல் தொடங்கிய அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது போர் புரிந்து வருகின்றன. ஈரானின் உச்ச தலைவரையும் அறிவியல் அறிஞர்களையும் படைத்தளபதிகளையும் அமெரிக்காவும் இஸ்ரேலும் வான்வழித்தாக்குதலில் கொலை செய்தன.
யுத்தம் பல வாரங்களாக நீடித்து வருகிறது. இந்தப் போரால் வளைகுடாவில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. ஹார்முஸ் நீரினையும் முடக்கப்பட்டதால், உலகம் முழுவதும் எரிபொருள் விலைகள் உயர்வதுடன், தட்டுப்பாடும் அதிகரித்துள்ளது.
இந்த சூழலில், 48 மணி நேர போர் நிறுத்தத்துக்கு ஒரு நட்பு நாட்டின் வாயிலாக, அமெரிக்கா கோரிக்கை வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சூழலில், அமெரிக்கா முன்மொழிந்த 48 மணி நேர போர் நிறுத்தத் திட்டத்தை ஈரான் நிராகரித்துவிட்டதாக, ஈரானின் ‘ஃபார்ஸ்’ செய்தி நிறுவனம் தெரிவித்தது.
தற்போதைய பதற்றமான சூழலுக்கு மத்தியில், ஈரானின் இந்த நிலைப்பாடு, போர் தொடர்ந்து கடுமையடைந்து வருவதை காட்டுகிறது. போரை நிறுத்துவதற்கான ராஜதந்திர முயற்சிகள் தோல்வியடைந்த அதே வேளையில், ராணுவ மோதல்களும் கடுமையாகத் தீவிரமடைந்துள்ளன.
இந்த நிலையில், நேற்று அடுத்தடுத்து இரண்டு அமெரிக்க விமானங்களை ஈரான் சுட்டு வீழ்த்தியது.
ஈரான் வான் பரப்பில் அத்துமீறி பறந்த அமெரிக்க விமானப் படையின் எப் -35 மற்றும் எப்- 15 இ ரக போர் விமானங்களை நேற்று ஈரான் இஸ்லாமிய புரட்சிப் படை சுட்டு வீழ்த்தியது. இது மாபெரும் அதிர்ச்சியை அமெரிக்க இராணுவத்தினரிடம் ஏற்படுத்தி உள்ளது. உளவியல் ரீதியாக தங்கள் வீரர்களுக்கு பெரும் பின்னடைவை இது ஏற்படுத்துவதால் இரு நாள் போர் ஒத்தி வைக்க அமெரிக்க முயற்சித்துள்ளது. ஆனால், அதனை ஈரான் நிராகரித்துள்ளது.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
May 26, 2026, 11:49 am
ஈரான் அமைதித் திட்டத்திற்காக ஆப்ரஹாம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட டிரம்ப் விரும்புகிறார்
May 26, 2026, 11:20 am
மத்திய கிழக்கில் பலமுனைப் போர்: அதிர்வலைகளில் சிக்கியுள்ளது உலகப் பொருளாதாரம்
May 26, 2026, 10:32 am
ஆப்பிரிக்காவை உலுக்கும் இபோலா: இப்போது ஐரோப்பாவுக்கும் பரவுமா?
May 25, 2026, 11:37 am
பிலிப்பைன்ஸில் கட்டிடம் இடிந்து விழுந்தது: உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்தது
May 25, 2026, 10:59 am
காங்கோவில் பதற்றம்: 2 இபோலா சிகிச்சை நிலையங்களுக்குத் தீ வைத்து கொளுத்திய மக்கள்
May 25, 2026, 9:44 am
பாகிஸ்தானில் ரயில் வெடிப்பில் 24 பேர் உயிரிழந்தனர்
May 24, 2026, 3:55 pm
இபோலா கிருமியால் ஆப்பிரிக்காவின் பிற நாடுகளுக்கும் ஆபத்து: சுகாதார அமைப்பு எச்சரிக்கை
May 24, 2026, 12:37 pm
கலிஃபோர்னியாவில் ரசாயனக் கசிவு: 40,000 மக்கள் வெளியேற உத்தரவு
May 23, 2026, 2:52 pm
