செய்திகள் உலகம்
ராயல் கிங்ஸ் குழுமத்தின் ஏற்பாட்டில் சிங்கப்பூரில் ஈகைப் பெருநாள் சந்திப்பும் ஸாலிஹீன் கல்வி அறக்கட்டளை மருத்துவக் கல்லூரி திட்டம் குறித்தும் விளக்கக் கூட்டம்
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் ஸாலிஹீன் கல்வி அறக்கட்டளை, தொண்டு அறக்கட்டளையின் சார்பில் ஈகைப் பெருநாள் சிறப்பு சந்திப்பு நிகழ்ச்சி சிங்கப்பூரில் 30. 03.2026 திங்கட்கிழமை மாலை 7.45 மணியளவில் செரங்கூன் சாலையில் அமைந்துள்ள சென்ட்ரியம் ஸ்கொயரில் நடைபெற்றது.
இந்த விழாவிற்கு ஸாலிஹீன் கல்வி அறக்கட்டளை தலைவர் ஹாஜி எம். அப்துல் ரஹ்மான் தலைமை வகித்தார். விழாவிற்கு வந்த அனைவரையும் ராயல் கிங்ஸ் குழும இயக்குநர் முஹம்மது இப்ராஹிம் வரவேற்புரை வழங்கினார்.

சாலிஹீன் அறக்கட்டளை திட்ட இயக்குநர் ஹாஜி ஜே. முஹம்மது பாரூக், தொழிலதிபர்கள், நண்பர்கள், சமூக முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
ஸாலிஹீன் கல்வி அறக்கட்டளை தலைவர் ஹாஜி எம். அப்துல் ரஹ்மான் பேசியதாவது:
தமிழகத்தில் உருவாகவிருக்கும் சாலிஹீன் மருத்துவக் கல்லூரி குறித்தும் அதன் எதிர்கால திட்டங்கள் குறித்தும் விரிவாக விளக்கமளித்தார். தமிழர்களின் நீண்டநாள் கனவாக அமைந்துள்ள இந்தத் திட்டம் தற்போது நடைமுறையில் உள்ளது என்றும், சமூகத்தின் ஒற்றுமையான ஆதரவுடன் விரைவில் இலக்கை எட்ட முடியும் என்றும் தெரிவித்தார்.
ஸாலிஹீன் கல்வி அறக்கட்டளை திட்ட இயக்குநர் ஹாஜி ஜே. முஹம்மது பாரூக், சாலிஹீன் மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை திட்டத்தின் தற்போதைய முன்னேற்ற நிலை குறித்து விரிவாக விளக்கமளித்து, திட்டம் முழுமையாக நிறைவு பெறும் காலக்கட்டத்தையும் எடுத்துரைத்தார்.
இந்த நிகழ்ச்சியை ஸாலிஹீன் கல்வி அறக்கட்டளை அறங்காவலரும் சிங்கப்பூர் ராயல் கிங்ஸ் நிறுவனர் தலைவருமான ஹாஜி சிராஜுதீன் குறுகிய காலத்தில் வெகு சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.
நிகழ்ச்சியை தலைமை தகவல், தொழில்நுட்ப அதிகாரி ரியாசுதீன் தொகுத்து வழங்கினார். மலேசியாவிலிருந்து நம்பிக்கை மீடியா இயக்குநர் கஜ்ஜாலி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த ஈகைப்பெருநாள் சந்திப்பு வெறும் கொண்டாட்ட நிகழ்வாக மட்டுமின்றி, சமுதாய முன்னேற்றத்திற்கான முக்கிய ஆலோசனை மேடையாகவும் அமைந்தது குறிப்பிடத்தக்கது.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
May 26, 2026, 11:49 am
ஈரான் அமைதித் திட்டத்திற்காக ஆப்ரஹாம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட டிரம்ப் விரும்புகிறார்
May 26, 2026, 11:20 am
மத்திய கிழக்கில் பலமுனைப் போர்: அதிர்வலைகளில் சிக்கியுள்ளது உலகப் பொருளாதாரம்
May 26, 2026, 10:32 am
ஆப்பிரிக்காவை உலுக்கும் இபோலா: இப்போது ஐரோப்பாவுக்கும் பரவுமா?
May 25, 2026, 11:37 am
பிலிப்பைன்ஸில் கட்டிடம் இடிந்து விழுந்தது: உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்தது
May 25, 2026, 10:59 am
காங்கோவில் பதற்றம்: 2 இபோலா சிகிச்சை நிலையங்களுக்குத் தீ வைத்து கொளுத்திய மக்கள்
May 25, 2026, 9:44 am
பாகிஸ்தானில் ரயில் வெடிப்பில் 24 பேர் உயிரிழந்தனர்
May 24, 2026, 3:55 pm
இபோலா கிருமியால் ஆப்பிரிக்காவின் பிற நாடுகளுக்கும் ஆபத்து: சுகாதார அமைப்பு எச்சரிக்கை
May 24, 2026, 12:37 pm
கலிஃபோர்னியாவில் ரசாயனக் கசிவு: 40,000 மக்கள் வெளியேற உத்தரவு
May 23, 2026, 2:52 pm
