நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

தோமஸ் கிண்ணம் 2026: லீ ஜி சியாவின் பங்கேற்பு கேள்விக்குறி

கோலாலம்பூர்:

இம்மாத இறுதியில் நடைபெறும் தாமஸ் கோப்பை 2026-ல் லீ ஜீ சியாவின் பங்கேற்பு நிலை முற்றிலும் அவரது தற்போதைய உடல் தகுதி நிலையைப் பொறுத்ததாகும்.

டென்மார்க்கின் ஹார்சென்ஸில் நடைபெறும் போட்டியில் நாட்டின் சார்பாகப் போட்டியிட, 100 சதவீதம் தகுதி நிலையை அடைந்த வீரர்கள் மட்டுமே பட்டியலிடப்படுவார்கள் என்று மலேசிய பூப்பந்து சங்கம் தெரிவித்துள்ளது.

சங்கத்தின் செயல்திறன் குழுத் தலைவர் டத்தோஸ்ரீ லீ சோங் வெய், ஜீ சியாவுக்கு ஏற்பட்ட கணுக்கால் காயம் முழுமையாக குணமாகவில்லை என்றால், அந்த நிலைமை அவரை நிச்சயமற்ற நிலையில் ஆக்கும் என்று தெரிவித்தார்.

"அவர் முழுமையாக குணமடையவில்லை என்றால், சிறந்த நிலையில் உள்ள வீரர்களை நாம் தேர்வு செய்ய வேண்டும்" என்று வெள்ளிக்கிழமை புக்கிட் கியாராவில் உள்ள மலேசிய பூப்பந்து அகாடமியில் (ABM) அவர் கூறினார்.

ஜீ சியாவின் முன்னேற்றம் தற்போது தனிப்பட்ட பயிற்சி இயக்குநர் கென்னத் ஜொனாசென் என்பவரால் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார். கென்னத் ஜொனாசென், ஜீ சியாவின் பயிற்சியாளரான லியூ டரெனுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளார்.

ஏப்ரல் 11 ஆம் தேதி வீரர்கள் பட்டியலைச் சமர்ப்பிப்பதற்கான இறுதி தேதியாக இருக்கும் நிலையில் முன்னாள் ஆல் இங்கிலாந்து சாம்பியனான இவர், சீரான உடல் தகுதி நிலையை மீண்டும் அடைய முடியுமா என்பதை இதுவே தீர்மானிக்கும்.

"ஜீ ஜியா முன்னதாக காயம் காரணமாக பயிற்சி செய்யவில்லை. அவர் நாளை (சனிக்கிழமை) ABM-க்குத் திரும்பக்கூடும் என்று தெரிகிறது, ஆனால் அவரது நிலை குறித்து எங்களுக்கு இன்னும் உறுதியாகத் தெரியவில்லை" என்று அவர் கூறினார்.

அதே நேரத்தில், லியோங் ஜுன் ஹாவ், ஜஸ்டின் ஹோ போன்ற பிற வீரர்களின் முன்னேற்றத்தால் சோங் வெய் மகிழ்ச்சியடைந்துள்ளார். இவர்கள் பயிற்சியின் போது ஊக்கமளிக்கும் செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஜீ ஜியா எதிர்வரும் காலத்தில் முழுமையாக குணமடைய வேண்டும் என்று அவர் நம்புவதாகவும், ஆனால் நாட்டின் சார்பாகப் போட்டியிட முற்றிலும் தயாராக உள்ள வீரர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset