செய்திகள் கலைகள்
அல்லு அர்ஜுனின் 25 வது படத்தை பசில் ஜோசப் இயக்குகிறார்
சென்னை:
அட்லி இயக்கும் சயின்ஸ் பிக் ஷன் படத்தில் நடித்து வருகிறார் அல்லு அர்ஜுன். இதில் தீபிகா படுகோன் நாயகியாக நடிக்கிறார். ராஷ்மிகா உள்பட மேலும் சில நடிகைகள் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
இப்படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் அவர் நடிக்க இருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஜுன் அல்லது ஜுலை மாதம் தொடங்கும் என தெரிகிறது. இப்படம் தொடர்பாகப் படக்குழு வெளியிட்ட அறிமுக வீடியோ வைரலானது. அனிருத் இசை அமைக்கிறார்.
இதையடுத்து அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடிக்கும் படத்தை மலையாள பட இயக்குநரும் நடிகருமான பசில் ஜோசப் இயக்க இருக்கிறார்.
இது அல்லு அர்ஜுனின் 25வது படம். இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 8, 2026, 11:02 am
பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்
October 6, 2026, 5:06 pm
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் 2 படத்தின் டிரெய்லர் வெளியானது
October 5, 2026, 3:48 pm
அதிக வசூல் சாதனை படைத்த அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்
October 4, 2026, 10:19 am
திரைப்பட இயக்குநா் சிங்கீதம் சீனிவாச ராவ் காலமானாா்
September 30, 2026, 3:27 pm
நடிகர் சூரியின் மண்டாடி திரைப்படம் 140 கோடி ரூபாய் வசூல் சாதனை
September 30, 2026, 3:17 pm
வெங்கட் பிரபு - சிவகார்த்திகேயன் இடையிலான படம் கைவிடப்பட்டது: வெங்கட் பிரபு எக்ஸ் தளத்தில் பதிவு
September 25, 2026, 2:54 pm
