நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பயணிகளின் பாதுகாப்பிற்குச் சவால்: காஜாங் எம்ஆர்டி நிலையத்தில் பாலியல் தொல்லைக் குற்றச்சாட்டு

பெட்டாலிங் ஜெயா: 

காஜாங் எம்ஆர்டி நிலையத்தில் ஒரு பெண்ணுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாகச் சந்தேகிக்கப்படும் நபரின் காணொலி சமூக வலைத்தளத்தில்  வைரலாகி வருவதைத் தொடர்ந்து போலிஸார் அந்நபரைத் தேடி வருகின்றனர். 

நேற்று காலை 9 மணியளவில் நிலையத்தின் ஏ வாயில் அருகில் நடந்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவத்தைக் காட்டும் 23 விநாடிகள் நீடிக்கும் கிளிப் ஒன்று, 'திரெட்ஸ்' என்ற சமூக ஊடகத் தளத்தில் வெளியானதாக காஜாங் போலிஸ் தலைவர் நாஸ்ரோன் அப்துல் யூசோஃப் கூறினார்.

"சந்தேக நபரைக் கண்டுபிடித்துக் கைது செய்யும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன" என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த வழக்கு தண்டனைச் சட்டத்தின் பிரிவு 509-ன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.  
குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அல்லது அபராதம், அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

பொதுமக்கள் ஊகங்களில் ஈடுபட வேண்டாம் என்றும், காணொலியை மேலும் பகிர்வதைத் தவிர்க்குமாறும் நாஸ்ரோன் அறிவுறுத்தினார். இத்தகைய செயல்கள் பொது ஒழுங்கினைச் சீர்குலைத்து, அமைதியின்மையை ஏற்படுத்தக்கூடும் என்று அவர் எச்சரித்தார்.

காணொலியைப் பரப்புபவர்கள் மீது 1998 ஆம் ஆண்டின் தகவல் தொடர்பு, பல்லூடகச் சட்டத்தின் பிரிவு 233-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset