செய்திகள் மலேசியா
புதிய பிரசவ கால விடுப்பு நிதியுதவித் திட்டம்; 100,000த்திற்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் பயனடைவார்கள்: டத்தோஶ்ரீ ரமணன்
சுபாங்:
சமூகப் பாதுகாப்பு அமைப்பான பெர்கேசோவின் கீழ் முன்மொழியப்பட்டுள்ள புதிய பிரசவ கால விடுப்பு நிதியுதவித் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் விரைவில் பயனடையக்கூடும்.
இந்தத் திட்டத்தை முழுமையாக ஆய்வு செய்து மேம்படுத்துமாறு தமது அமைச்சகத்தின் கீழ் உள்ள பெர்கேசோ அமைப்பிற்கு உத்தரவிட்டுள்ளதாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
உழைக்கும் பெண்களுக்கு ஆதரவளிப்பதிலும், தேசக் கட்டமைப்பில் அவர்களின் முக்கியப் பங்கை அங்கீகரிப்பதிலும் அரசாங்கம் கொண்டுள்ள உறுதிப்பாட்டை இந்த முன்முயற்சி பிரதிபலிக்கிறது.
பெண்கள் வெறும் பங்களிப்பாளர்கள் மட்டுமல்ல; அவர்களே நாட்டின் பொருளாதாரத்தின் முக்கிய உந்துச்சக்திகளாகத் திகழ்கின்றனர்.
பெர்கேசோ காப்பீட்டு முறையின் கீழ், பிரசவ கால விடுப்பு நிதியுதவித் திட்டத்திற்கான முன்மொழிவைச் செம்மைப்படுத்துமாறு நான் மனிதவள அமைச்சின் ஊடாக பெர்கேசோவிற்கு உத்தரவிட்டுள்ளேன்.
இந்த முன்முயற்சி நாடு முழுவதும் பிரசவ விடுப்பில் இருக்கும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தாய்மார்களுக்கு நன்மையளிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இன்று அமைச்சு தொழிலாளர்கள், முதலாளிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் அமர்வைத் தொடங்கி வைத்துப் பேசிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
1955ஆம் ஆண்டு வேலைவாய்ப்புச் சட்டத்தின் கீழ் 2023 ஜனவரி 1 முதல் பெண் ஊழியர்கள் குறைந்தபட்சம் 98 நாட்கள் தொடர்ச்சியான ஊதியத்துடன் கூடிய பிரசவ கால விடுப்பைப் பெறத் தகுதியுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து பேசிய ரமணன், பெர்கேசோவின் கீழ் 'பயணிகள் திட்டம்' (Traveller Scheme) உள்ளிட்ட பல திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருவதாகவும், இதன் மூலம் வேலைக்காக தினமும் சிங்கப்பூருக்குச் சென்று வரும் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட மலேசியர்கள் பயனடைவார்கள்.
பாதுகாப்பு இல்லாமல் அவர்களைத் தனியாக விட முடியாது. அவர்களின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பயணிகள் திட்டத்தை அறிமுகப்படுத்தும் இறுதிக்கட்டத்தில் அமைச்சகம் தற்போது உள்ளது என்றார் அவர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 2, 2026, 10:05 pm
திருவிழா காலங்களில் மருத்துவ குழுவின் சேவை மகத்தானது: டத்தோ சிவக்குமர்
April 2, 2026, 6:24 pm
வழக்கறிஞர்கள் செயற்கை நுண்ணறிவை அதிகம் சார்ந்திருப்பது கவலையளிக்கிறது: தலைமை நீதிபதி
April 2, 2026, 6:22 pm
கர்நாடக இசை அடுத்த தலைமுறையினரை ஈர்க்க வேண்டும்: சுஜித்ரா ஜெயசீலன்
April 2, 2026, 5:53 pm
தற்காப்புக் கலை தந்த தன்னம்பிக்கை: எஸ்.பி.எம் தேர்வில் தென்கொரிய மாணவி சாதனை
April 2, 2026, 4:20 pm
