நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

திருவிழா காலங்களில் மருத்துவ குழுவின் சேவை மகத்தானது: டத்தோ சிவக்குமர்

மாரான்:

திருவிழா காலங்களில் மருத்துவ குழுவின் சேவை மிகவும் மகத்தானது.

மஹிமா தலைவர் டத்தோ ந. சிவக்குமர் இதனை கூறினார்.

மாரான் மரத்தாண்டவர் ஆலயத்தில் பங்குனி உத்திர விழா சிறப்பான முறையில் நடைபெற்றது.

லட்சக்கணக்கான பக்தர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

அதே வேளையில் ஏராளமான பக்தர்கள் தங்களின் நேர்த்திக் கடனை பூர்த்தி செய்தனர்.

இந்த பங்குனி உத்திர விழாவிற்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மருத்துவ குழுவினர் இங்கு முகாமிட்டிருந்தனர்.

பகாங் சுகாதாரத் துறையைச் சேர்ந்த மருத்துவர்கள் உட்பட பலர் இப்பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.

இப்படி ஒவ்வொரு திருவிழா காலக்கட்டங்களிலும் இரவு பகல் பாராமல் உழைக்கும் மருத்துவ குழுவின் பணி மகத்தானது.

அவர்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் மஹிமாவின் சார்பில் இம்மருத்துவ குழுவினருக்கு வெஸ்ட் வழங்கப்பட்டது என்று டத்தோ சிவக்குமார் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்


தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset