செய்திகள் மலேசியா
கர்நாடக இசை அடுத்த தலைமுறையினரை ஈர்க்க வேண்டும்: சுஜித்ரா ஜெயசீலன்
கோலாலம்பூர்:
கர்நாடக இசை அடுத்த தலைமுறையினரை ஈர்க்க வேண்டும்.
சுகம் அறவாரியத்தின் தலைவர் சுஜித்ரா ஜெயசீலன் இதனை வலியுறுத்தினார்.
கர்நாடக இசை நமது பாரம்பரிய இசையாகும். கிட்டத்தட்ட 1,500 ஆண்டுகால வரலாற்றில் இந்த இசை கொண்டுள்ளது.
தேவாரதத்தில் இருந்து உதயமானது தான் கர்நாடக இசை.
தமிழ்மொழிக்கு கொடுக்க வேண்டிய முன்னுரிமை இந்த இசைக்கும் கொடுக்க வேண்டும்.
ஆனால் நம் நாட்டில் குறிப்பிட்டவர்கள் தான இந்த இசையையும், வாத்தியங்களையும் பயில்கின்றனர்.
கர்நாடக இசை நிகழ்ச்சி என்றால் சலிப்பு தட்டும் என்ற எண்ணம் பலரிடம் இருக்கிறது.
இதனை எல்லாம் முறியடிக்கும் நோக்கில் தான் மலேசிய அனைத்துலக கர்நாடக இசை விழாவை அறவாரியம் ஏற்பாடு செய்துள்ளது.
இவ்விழா வரும் ஏப்ரல் 24 முதல் 26 வரை மைடேக்கில் நடைபெறவுள்ளது.
அனைத்துலக அளவில் புகழ்பெற்ற இசைக் கலைஞர்கள், வளர்ந்து வரும் மலேசியத் திறமையாளர்கள், பல்வேறு சமூகத்தினரை ஒன்றிணைத்து, இசை, கலாச்சாரப் பிணைப்பைக் கொண்டாடும் ஒரு நிகழ்வாக இது அமையும்.
மேலும் அனைவருக்கும் எளிதில் அணுகக்கூடிய, சிறப்பான ஒரு விழாவாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இலவச பொது நிகழ்ச்சிகளையும் கட்டணத்துடன் கூடிய உயர்தர நிகழ்ச்சிகளையும் கொண்டுள்ளது.
இதன் மூலம், உயர் கலைத் தரங்களைப் பேணிக்கொண்டே, கலைகள் அனைவருக்கும் எளிதில் கிடைக்கக்கூடியதாக இருப்பதை உறுதி செய்கிறது என்று சுஜித்ரா கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 2, 2026, 6:24 pm
வழக்கறிஞர்கள் செயற்கை நுண்ணறிவை அதிகம் சார்ந்திருப்பது கவலையளிக்கிறது: தலைமை நீதிபதி
April 2, 2026, 5:53 pm
தற்காப்புக் கலை தந்த தன்னம்பிக்கை: எஸ்.பி.எம் தேர்வில் தென்கொரிய மாணவி சாதனை
April 2, 2026, 4:20 pm
லங்காவியில் 1,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நெல் சாகுபடியை ஒத்திவைக்கிறார்கள்
April 2, 2026, 3:51 pm
மலேசியா ஒன்றும் குப்பைத் தொட்டி அல்ல: மின்னணுக் கழிவுகளுக்கு முற்றுப்புள்ளி
April 2, 2026, 3:12 pm
பெந்தோங் இராணுவ முகாமில் இளம் இராணுவ வீரர் தாக்கப்பட்டார்
April 2, 2026, 3:03 pm
