செய்திகள் மலேசியா
தற்காப்புக் கலை தந்த தன்னம்பிக்கை: எஸ்.பி.எம் தேர்வில் தென்கொரிய மாணவி சாதனை
மீரி:
கிம் நா ஈன் (17), மலேசியாவில் 2025 எஸ்.பி.எம் தேர்வில் மலாய் மொழி உட்பட கலந்துகொண்ட அனைத்து 10 பாடங்களிலும் A+ பெற்ற மலேசியாவின் முதல் தென்கொரிய மாணவி என்ற சாதனையை படைத்துள்ளார்.
நா ஈனின் தந்தை கிம் தேஹோ, செவ்வாயன்று முடிவுகளை பெற செயின்ட் கொலம்பா இடைநிலைப்பள்ளிற்குச் சென்றபோது தன்னால் நம்ப முடியவில்லை என்று தி போர்னியோ போஸ்டிடம் தெரிவித்தார்.
"அவள் முடிவுகளைச் சொன்ன நிமிடம் கண்ணீர் வந்தது. மலாய் மொழி உட்பட அனைத்து பாடங்களிலும் நேர் ஏ+ பெறுவாள் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை, ஏனென்றால் தொடக்கப்பள்ளி காலங்களில் மலாய் மொழி கற்றுக்கொள்வதில் அவளுக்கு சிரமம் இருந்தது" என்று அவர் கூறினார்.
நா ஈன் 2025 எஸ்.பி.எம் தேர்வில் மலாய் மொழி, ஆங்கிலம், நன்னெறி, வரலாறு, கணிதம், கூடுதல் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், பைபிள் ஆகிய பாடங்களை எடுத்தார்.
நா ஈனுக்கு 5 வயதாக இருந்த 2013-இல் குடும்பம் தென்கொரியாவிலிருந்து மீரிக்கு குடிபெயர்ந்தது. அவர் செயின்ட் கொலம்பா ஆரம்பப்பள்ளியில் தன் கல்வியைத் தொடர்ந்தார்.
சிறப்புத் தேவையுள்ள குழந்தைகளுக்குக் கற்பிக்கும் தெக்வோண்டோ ஆசிரியரான தேஹோ, தன் மகள் பள்ளிக்கு வெளியே தனியார் ட்யூஷனைச் சாராமல் இருந்ததாக கூறினார்.
"என் மகளுக்கு தெக்வோண்டோவில் நான்காம் டான் கறுப்பு பட்டை (குக்கிவோன்) உள்ளது, ஒவ்வொரு நாளும் பயிற்சி செய்கிறாள்.
"தேசிய, சர்வதேச போட்டிகளிலும் கலந்துகொள்கிறாள். அதனால்தான் அவளின் முடிவுகளைக் கண்டு நாங்கள் மிகவும் ஆச்சரியப்பட்டு பெருமைப்படுகிறோம்" என்று அவர் தெரிவித்தார்.
எஸ்.பி.எம் தேர்வின் கடினத்தை தாங்கிக்கொள்ள தெக்வோண்டோ பயிற்சி உதவியதாக நா ஈன் கூறினார்.
"எனது எஸ்.பி.எம் முடிவுகள் இறுதியில் வெளியானதால், பல்மருத்துவம் படிக்கும் முன்பு ஏ-லெவல்ஸ் எடுக்க திட்டமிடுகிறேன்.
"ஆனால் அதற்கு முன்பாக, அக்டோபர் 17-ல் தென்கொரியாவின் ஜேஜூ தீவில் நடைபெறும் 107-வது கொரியா தேசிய விளையாட்டு போட்டிக்கான பயிற்சியில் கவனம் செலுத்துகிறேன்" என்று அவர் கூறினார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
April 2, 2026, 6:24 pm
வழக்கறிஞர்கள் செயற்கை நுண்ணறிவை அதிகம் சார்ந்திருப்பது கவலையளிக்கிறது: தலைமை நீதிபதி
April 2, 2026, 6:22 pm
கர்நாடக இசை அடுத்த தலைமுறையினரை ஈர்க்க வேண்டும்: சுஜித்ரா ஜெயசீலன்
April 2, 2026, 4:20 pm
லங்காவியில் 1,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நெல் சாகுபடியை ஒத்திவைக்கிறார்கள்
April 2, 2026, 3:51 pm
மலேசியா ஒன்றும் குப்பைத் தொட்டி அல்ல: மின்னணுக் கழிவுகளுக்கு முற்றுப்புள்ளி
April 2, 2026, 3:12 pm
பெந்தோங் இராணுவ முகாமில் இளம் இராணுவ வீரர் தாக்கப்பட்டார்
April 2, 2026, 3:03 pm
