நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தனவிதாவின் மரணத்திற்கு போலிஸ் அதிகாரி, ஆசிரியரின் அலட்சியமும் ஒரு காரணம்; உடனடியாக விசாரிக்கப்பட வேண்டும்: தயாளன் ஸ்ரீ பாலன்

கோலாலம்பூர்:

தனவிதாவின் மரணத்திற்கு போலிஸ் அதிகாரி, ஆசிரியரின் அலட்சியமும் ஒரு முக்கிய காரணம் என சந்தேகிக்கப்படுகிறது.

ஆக இவ்விவகாரத்தை போலலிசார் உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று  மியாபோர்ஸ் அமைப்பின் தலைவர் தயாளன் ஸ்ரீபாலன் வலியுறுத்தினார்.

கொடுகைக்கு இலக்காக சிறுமி தனவிதா அண்மையில் மரணமடைந்தனர். இந்த சம்பவம் தைப்பிங்கில் நடந்தது.

இச்சம்பவத்தில் மரணமடைந்த தனவிதா தாயாரால் கைவிடப்பட்ட பிள்ளையாகும்.

அத்தாயாரின் குடும்பத்தார் தான் தனவிதா வளர்த்து வந்தனர்.

இந்நிலையில் தனவிதா பள்ளிக்கு செல்ல பிறப்பு பத்திரம் வேண்டும் என்பதால் அவர்கள் தாயாரை சந்திக்க தைப்பிங் சென்றனர்.

அப்போது தனவிதாவை போலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்ற அத்தாய் பிள்ளை எனக்கு வேண்டும் புகார் செய்தார்.

உடனே போலிஸ் நிலையத்திற்கு சென்ற அக்குடும்பத்தினரை அங்குள்ள போலிஸ் அதிகாரி ஒருவர் மிரட்டியுள்ளார்.

குறிப்பாக தனவிதா தாயாரிடம் தான் இருக்க வேண்டும். நீங்கள் போகவில்லை என்றால் கைது செய்ய மிரட்டியுள்ளார்.

தனவிதாவை வளர்த்து வந்தவர்கள் மன்றாடியும் போலிஸ் அதிகாரி கேட்கவில்லை.

இதனால் அவர்கள் திரும்பி கோலாலம்பூருக்கு வந்துள்ளனர்.

இந்நிலையில் தனவிதா பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளார். நீண்ட நாட்கள் தனவிதா பள்ளிக்கு வராததால் ஆசிரியர் ஒருவர் வீட்டிற்கு சென்று விசாரித்து படம் எடுத்துள்ளார்.

அப்படத்தில் தனவிதாவின் கை உடைந்து இருப்பது தெளிவாக தெரிகிறது.

ஆனால் ஆசிரியர் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் கடுமையான கொடுமைக்கு இலக்கான தனவிதா இன்று இறந்து விட்டார்.

தனவிதாவின் மரணத்தை தொடர்ந்து அவரின் தாயார், தாயாரின் மூன்றாவது கணவர், கணவரின் தாய், தந்தையை போலீசார் கைது செய்து தடுத்து வைத்துள்ளனர்.

முட்டை சாப்பிட்டதால் தனவிதா தாக்கப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

எது எப்படி இருந்தாலும் தனவிதாவின் மரணத்திற்கு போலிஸ் அதிகாரி, ஆசிரியரின் அலட்சியமும் காரணமாக உள்ளது.

ஆக அவர்களிடம் போலிசார் உடனடியாக விசாரிக்கப்பட வேண்டும் என்று தயாளன் ஸ்ரீ பாலன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்




தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset