செய்திகள் மலேசியா
வழக்கறிஞர்கள் செயற்கை நுண்ணறிவை அதிகம் சார்ந்திருப்பது கவலையளிக்கிறது: தலைமை நீதிபதி
கோலாலம்பூர்:
வழக்கறிஞர்கள் செயற்கை நுண்ணறிவை அதிகம் சார்ந்திருப்பது கவலையளிக்கிறது.
நாட்டின் தலைமை நீதிபதி டான்ஸ்ரீ வான் அஹ்மத் ஃபரித் வான் சாலே இதனை கூறினார்.
வழக்கறிஞர்கள் செயற்கை நுண்ணறிவை அதிகமாகச் சார்ந்திருக்க வேண்டாம்.
இந்தத் தொழில்நுட்பம் வழக்கறிஞர்களை வெறும் இயந்திரங்களாக மாற்றிவிடக் கூடாது
குறிப்பாக இளம் வழக்கறிஞர்களிடையே இந்தத் தொழில்நுட்பத்தைச் சார்ந்திருக்கும் ஆசை குறித்து கவலைகளை வெளிப்படுத்தியது.
கற்றுக்கொள்வது, தவறுகள் செய்வது, போராடுவது நினைவில் கொள்வது மனிதரின் இயல்பாகும்
ஆனால் செயற்கை நுண்ணறிவு நமது சொந்த மனத்திறனைக் குறைவாகப் பயன்படுத்த வைக்கிறது என்பதில் சந்தேகமில்லை.
நமது சிந்தனையை செயற்கை நுண்ணறிவுக்கு ஒப்படைக்கும்போது, அது நேரத்தை மிச்சப்படுத்துகிறது.
ஆனால், நாம் நம்முடைய ஒரு பகுதியை இழக்கிறோம்.
செயல்திறன் என்பது இயந்திரங்களுக்கானது.
மலாயா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற காமன்வெல்த் சட்டக் கல்வி சங்க மாநாட்டில் அவர் இவ்வாறு கூறினார்.
வழக்கறிஞர்கள் தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஆனால் அதை மாற்றாக அல்லாமல், ஒரு உதவியாக விவேகத்துடன் பயன்படுத்த வேண்டும் என்று அவர் ஊக்குவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 2, 2026, 6:22 pm
கர்நாடக இசை அடுத்த தலைமுறையினரை ஈர்க்க வேண்டும்: சுஜித்ரா ஜெயசீலன்
April 2, 2026, 5:53 pm
தற்காப்புக் கலை தந்த தன்னம்பிக்கை: எஸ்.பி.எம் தேர்வில் தென்கொரிய மாணவி சாதனை
April 2, 2026, 4:20 pm
லங்காவியில் 1,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நெல் சாகுபடியை ஒத்திவைக்கிறார்கள்
April 2, 2026, 3:51 pm
மலேசியா ஒன்றும் குப்பைத் தொட்டி அல்ல: மின்னணுக் கழிவுகளுக்கு முற்றுப்புள்ளி
April 2, 2026, 3:12 pm
பெந்தோங் இராணுவ முகாமில் இளம் இராணுவ வீரர் தாக்கப்பட்டார்
April 2, 2026, 3:03 pm
