நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெந்தோங் இராணுவ முகாமில் இளம்  இராணுவ வீரர் தாக்கப்பட்டார் 

 தெமெர்லோ: 

"என் மகனின் மூளை ஆக்ஸிஜனைப் பெறத் தவறிவிட்டது என்றும் மூளை திசு இறந்தது என்றும் மருத்துவர் என்னிடம் கூறினார்". "அவரது நிலை மிகவும் மோசமாக உள்ளது" என்று தன் மகன் கடந்த ஞாயிற்றுக்கிழமை இராணுவ முகாமில் தாக்கப்பட்டதாகக் கூறப்பட்ட பின்னர் இப்போது ஆபத்தான நிலையில் இருப்பதாக இராணுவரின் தந்தை 49 வயதான ரோசாஃபிண்டி தம்பி சிக் கூறினார்.

26 ஆண்டுகளாக முன்னாள் கமாண்டோவாக இருக்கும் ரோசாஃபிண்டி, தனது மகன் முஹம்மத் அமீருல் ராசிக், 24, ஆபத்தான நிலையில் பெந்தோங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுவதற்கு முன்பு மயக்கமடைந்ததாக கமாண்டிங் அதிகாரியால் தெரிவிக்கப்பட்டதாக கூறினார்.

 இரவு 10:41 மணியளவில் தன் மகன் குறித்த அழைப்பைப் பெற்ற பிறகு, அவர் உடனடியாக கெமாஸ், நெகிரி செம்பிலானில் உள்ள தனது வீட்டிலிருந்து இரவு 11 மணிக்கு பெந்தோங் மருத்துவமனைக்குச் சென்றார்.

நான் அதிகாலை 2 மணியளவில் அங்கு சென்றடைந்தேன். என் மகனின் இதயம் நின்றுவிட்டதால் அவனது நிலைமை சரியில்லை என்று மருத்துவமனை எனக்குத் தெரிவித்தது.

"அவனது இதயம் மீண்டும் துடிக்கத் தொடங்குவதற்கு முன்பு, மருத்துவர் ஒரு மணி நேரம் சி.பி.ஆர் செய்தார்," என்று இன்று தெமர்லோ மருத்துவமனையில் சந்தித்தபோது அவர் கூறினார்.

பாதிக்கப்பட்டவர் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அதிகாலை 5 மணியளவில் தெமெர்லோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் என்று ரோசாஃபிண்டி தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவரின் இருதயம் நீண்ட நேரம் நின்றதால் மூளைக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் தனது மகன் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் மூளை திசு செயலிழந்துவிட்டதாகவும் மருத்துவர் தனக்குத் தெரிவித்ததாக அவர் கூறினார்.

சி. டி. ஸ்கேன் முடிவுகள் உள் காயங்கள் எதுவும் இல்லை என்று உறுதிப்படுத்தினாலும் நீண்ட நேரமாக நிகழ்த்தப்பட்ட சிபிஆர் காரணமாக பாதிக்கப்பட்டவரின் இருதயம் வீங்கியிருந்தது.

இதற்கு முன்பு தனது மகன் தாக்கப்பட்டதாகவும் சம்பந்தப்பட்ட நபர்கள் குறித்து தனக்கு தெரிவிக்கப்படவில்லை என்றார் அவர்.

சந்தேக நபர் கோர்ப்ரல் பதவியில் இருப்பதாகவும், தடுப்பு காவல் விண்ணப்பத்திற்காக பெந்தோங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்படுவதற்கு முன்பு காவல்துறையினரால் ஏற்கனவே கைது செய்யப்பட்டதாகவும் தனக்குத் தெரிவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

கமாண்டோவாக தனது 26 ஆண்டுகால சேவை முழுவதும், இராணுவப் பயிற்சி ஒருபோதும் உறுப்பினர்களுக்குத் தங்கள் சொந்த தோழர்களைத் தாக்கவோ காயப்படுத்தவோ கற்றுக்கொடுக்கவில்லை என்று ரோசாஃபிண்டி தெரிவித்தார்.

"என் மகனுக்குக் நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன்". இப்போது அவர் ஆபத்தான நிலையில் உள்ளார், எங்கள் முழு குடும்பமும் மிகவும் வருத்தமாக உள்ளது "என்று அவர் கூறினார்.

தனது மகன் மூன்று ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றியதாகவும், இதற்கு முன்பு அவருக்கு கடுமையான பிரச்சினைகள் எதுவும் இருந்ததில்லை என்றும் ரோசாஃபிண்டி தெரிவித்தார்.


"இந்தச் சம்பவம் ஒரு இராணுவ நடைமுறை அல்ல, மாறாக தங்கள் பதவியைத் துஷ்பிரயோகம் செய்த ஒரு நபரின் நடவடிக்கை என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது".

"என் மகன் பகடிவத்தைக்கு ஆளாகியுள்ளார்," என்று அவர் கூறினார்.

முன்னதாக, இங்குள்ள 25 வது பட்டாலியன் ராயல் மலாய் ரெஜிமென்ட் (ஆர்ஏஎம்டி) இராணுவ முகாமில் நடந்ததாக நம்பப்படும் ஒரு சம்பவத்தில் தாக்கப்பட்டதால் ஒரு இராணுவர் பலத்த காயமடைந்ததாகக் காவல்துறை உறுதிப்படுத்தியதாக ஊடகங்கள் தெரிவித்தன.

பெந்தோங் மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் ஜைஹாம் முகமது கஹார், நேற்று காலை 8:45 மணிக்கு பெந்தோங் மாவட்ட காவல் தலைமையகத்தில் (ஐபிடி) அறிக்கை பெறப்பட்டதாக கூறினார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset