செய்திகள் மலேசியா
மலேசியா ஒன்றும் குப்பைத் தொட்டி அல்ல: மின்னணுக் கழிவுகளுக்கு முற்றுப்புள்ளி
புத்ராஜெயா:
ஏற்கனவே நாட்டில் இருக்கும் மின்னணு கழிவுகளை (e-waste) இலக்காக கொண்ட பெரிய அளவிலான ஒருங்கிணைந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று டான் ஸ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்தார்.
புக்கிட் அமான் உள்நாட்டு பாதுகாப்பு, பொது ஒழுங்கு துறை (KDNKA) இந்த நடவடிக்கைக்கு தலைமை தாங்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (MACC) தலைமை ஆணையர், துறைமுகங்கள் வழியாக ஏற்கனவே கடந்துவிட்டு தற்போது நாடு முழுவதும் தொழிற்சாலைகள், பிற வளாகங்களில் இருக்கும் மின்னணு கழிவுகளை இலக்காக கொண்டு அமலாக்கம் செய்யப்படும் என்று கூறினார்.
"இந்தப் பிரச்சினை வெறும் சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்டதல்ல, இது ஒரு பொருளாதார குற்றமாகும்" என்று வியாழக்கிழமை (ஏப்ரல் 2) எம்.ஏ.சி.சி. தலைமையகத்தில் நடைபெற்ற பல முகவர் பணியணி (MATF) ஈடுபாட்டு அமர்வில் அவர் தெரிவித்தார்.
ஒப்ஸ் மெட்டல் விசாரணையில் மலேசியா வெளிநாட்டிலிருந்தான சட்டவிரோத கழிவுகளுக்கான குப்பைத்தொட்டியாக பயன்படுத்தப்பட்டதாக தெரியவந்தது என்றும், இதில் ஆவண போலியாக்கம், தவறான சரக்கு அறிவிப்பு, இறக்குமதி உரிமங்களைத் துஷ்பிரயோகம் செய்வது அடங்குவதாகவும் அஸாம் கூறினார்.
கொள்கலன்கள் சரியான ஆய்வு இல்லாமல் நுழைவு புள்ளிகளைக் கடக்க அமலாக்கத்திற்கு உள்ளே இருந்த ஊழல் கூறுகளும் வழிசெய்தன என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
800-க்கும் மேற்பட்ட மின்னணு கழிவு கொள்கலன்கள் இன்னும் கிள்ளான் துறைமுகத்தில் இருப்பதாகவும், பல முகவர் அமைப்புகளை உள்ளடக்கிய மூல நாடுகளுக்குத் திருப்பி அனுப்புவது, சட்டபூர்வமான அகற்றல் உட்பட பல முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
தொடர்ந்த கடத்தல் முயற்சிகள் குறித்த கவலைகளால் பினாங்கு, சபா, சரவாக், ஜொகூர், பஹாங் உட்பட மற்ற துறைமுகங்களுக்கும் கண்காணிப்பு விரிவாக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
பிளாஸ்டிக் கழிவு குறித்து, இறக்குமதியின் அவசியம், ஒதுக்கீட்டை மதிப்பீடு செய்ய சம்பந்தப்பட்ட முகவர் அமைப்புகளுடன் ஈடுபாடுகள் மேற்கொள்ளப்படும் என்று அஸாம் கூறினார்.
சுங்கவரி (இறக்குமதி தடை) (திருத்தம்) (எண். 3) ஆணை 2026-ன் கீழ் வியாழக்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மின்னணு கழிவு இறக்குமதியில் முழுமையான தடையையும் அரசாங்கம் விதித்துள்ளது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
April 2, 2026, 5:53 pm
தற்காப்புக் கலை தந்த தன்னம்பிக்கை: எஸ்.பி.எம் தேர்வில் தென்கொரிய மாணவி சாதனை
April 2, 2026, 4:20 pm
லங்காவியில் 1,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நெல் சாகுபடியை ஒத்திவைக்கிறார்கள்
April 2, 2026, 3:12 pm
பெந்தோங் இராணுவ முகாமில் இளம் இராணுவ வீரர் தாக்கப்பட்டார்
April 2, 2026, 3:03 pm
சுங்கை பூலோவில் அதிரடி சோதனை: விதிமீறலில் ஈடுபட்ட வெளிநாட்டவரின் மோட்டார் சைக்கிள் பறிமுதல்
April 2, 2026, 1:18 pm
சட்டத்தில் அதிகார பாராபட்சம்; உலக ஒழுங்கைச் சீர்குலைக்கும்: பிரதமர் எச்சரிக்கை
April 2, 2026, 1:17 pm
