செய்திகள் விளையாட்டு
ஆசியக் கிண்ணக் கால்பந்து: மலேசியாவை வீழ்த்தத் துடிக்கும் வியட்நாம்
கோலாலம்பூர்:
2027-ஆம் ஆண்டு ஆசியக் கிண்ணக் கால்பந்து போட்டிக்கு வியட்நாம் ஏற்கனவே தகுதி பெற்றுவிட்ட போதிலும், நாளை இரவு நடைபெறவுள்ள மலேசியாவிற்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றியைப் பதிவு செய்து தனது தகுதிச் சுற்றுப் பயணத்தை மிகச்சிறப்பாக நிறைவு செய்ய அந்த அணி திட்டமிட்டுள்ளது.
வியட்நாமின், தியன் ட்ரூங் மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில் வெற்றி பெறுவது, வருங்காலத் தொடர்களில் தங்கள் அணியின் உத்வேகத்தை அதிகரிக்கும் என வியட்நாம் தலைமைப் பயிற்சியாளர் கிம் சாங் சிக் தெரிவித்துள்ளார்.
மலேசிய அணியின் ஏழு வீரர்கள் தொடர்பான ஆவண மோசடி புகாரைத் தொடர்ந்து, ஆசியக் கால்பந்து கூட்டமைப்பு (AFC) மலேசியாவிற்குத் தண்டனை விதித்தது. இதன் அடிப்படையில், முன்னதாக நேபாளம், வியட்நாம் அணிகளுக்கு எதிராக மலேசியா விளையாடிய போட்டிகளில் அந்த அணி தோற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்தத் தண்டனையால் 15 புள்ளிகளுடன் வியட்நாமின் குழு எஃப் பிரிவில் முதலிடம் பிடித்து சவூதி அரேபியாவில் நடைபெறவுள்ள இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. மலேசியா 9 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.
தனது சொந்த மண்ணில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் மலேசிய அணியை ஒருபோதும் எளிதாகக் கருதப்போவதில்லை என்றும், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெறுவதே இலக்கு என்றும் பயிற்சியாளர் கிம் சாங் சிக் உறுதியளித்துள்ளார்.
ஆசியக் கிண்ணத்திற்குத் தகுதி பெற்ற மகிழ்ச்சியில் இருக்கும் தங்களுக்கு, ரசிகர்களின் ஆதரவு பெரும் பலமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஹரிமாவ் மலாயா என அழைக்கப்படும் மலேசிய அணிக்கு இந்த ஆட்டம் ஒரு சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 30, 2026, 9:25 am
கானாவை எதிர்கொள்ள மாற்றியமைக்கப்பட்ட ஜெர்மனி அணி
March 30, 2026, 9:21 am
அனைத்துலக நட்புமுறை ஆட்டம்: பிரான்ஸ் வெற்றி
March 29, 2026, 10:19 am
இங்கிலாந்து பயிற்சி முகாமில் இருந்து எட்டு வீரர்கள் வெளியேறினர்
March 28, 2026, 9:51 am
அனைத்துலக நட்புமுறை ஆட்டம்: ஜெர்மனி வெற்றி
March 28, 2026, 9:50 am
அனைத்துலக நட்புமுறை ஆட்டம்: இங்கிலாந்து சமநிலை
March 27, 2026, 9:30 am
அனைத்துலக நட்புமுறை ஆட்டம்: பிரான்ஸ் வெற்றி
March 27, 2026, 9:25 am
உலகக் கிண்ண தகுதிச்சுற்று இறுதிப் போட்டிக்கு இத்தாலி தகுதி பெற்றது
March 26, 2026, 8:58 am
லிவர்பூல் கிளப்பின் சாலாவிற்கு மாற்று வீரர்களுக்கான பட்டியலில் எம்பாப்பே முதன்மை வகிக்கிறார்
March 26, 2026, 8:54 am
