செய்திகள் மலேசியா
புரூணை மாநிலத்தின் அதிரடி அறிவிப்பு: ஏப்ரல் 1 முதல் வெளிநாட்டு வாகனங்களுக்குப் புதிய எரிபொருள் விதிமுறை அமல்
மீரி:
புரூணை மாநிலத்திற்குள் நுழையும் வெளிநாட்டுப் பதிவு பெற்ற வாகனங்கள், தங்களது எரிபொருள் கலனில் குறைந்தது முக்கால் பங்கு எரிபொருளைக் கொண்டிருக்க வேண்டும் என்ற புதிய நடைமுறை ஏப்ரல் 1 முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளது.
நிலவும் புவிசார் அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு, எரிபொருள் விநியோகத்தைப் பாதுகாக்கும் நோக்கில் இம்மாநிலத்தின் எரிசக்தி துறை இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளது.
புதிய விதிகளின்படி, நுழைவு வாயில்களில் சோதனை செய்யப்படும்போது போதுமான எரிபொருள் இல்லாத வெளிநாட்டு வாகனங்கள் உள்ளே நுழைய அனுமதிக்கப்பட மாட்டாது.
இருப்பினும், அரசுப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு இந்த விதியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இங்கு தங்கியிருக்கும் காலக்கட்டத்தில், வெளிநாட்டு வாகனங்கள் சந்தை விலையிலான உயர் ரக எரிபொருளை மட்டுமே குறிப்பிட்ட விற்பனை நிலையங்களில் பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்படும்.
வெளியூர் சென்று திரும்பும் உள்ளூர் வாகனங்களுக்கு, முதல்முறை நுழையும்போது இந்த விதிமுறை பொருந்தாது.
ஆனால், அதே வாகனங்கள் 24 மணி நேரத்திற்குள் மீண்டும் எல்லை கடந்து உள்ளே நுழைய முயன்றால், அவையும் முக்கால் பங்கு எரிபொருள் வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முறையற்ற வகையில் எரிபொருள் பெறுவதைத் தவிர்க்க, எல்லைச் சாவடிகளில் சோதனைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கைகள் அனைத்தும் எரிபொருள் பாதுகாப்பை உறுதி செய்யவும், மானிய விலையில் வழங்கப்படும் எரிபொருள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கவும் மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள், வாகன உரிமையாளர்கள் இந்த புதிய விதிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு நிர்வாகத் தரப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
April 2, 2026, 11:14 am
காமன்வெல்த் சட்டக் கல்வி சங்கத்தின் மாநாடு 2026ஐ பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் தொடக்கி வைத்தார்
April 2, 2026, 10:57 am
சட்டவிரோத இல்லத்தில் 36 சிறுவர்கள்: 10 ஆண்டுகளாகத் தொடர்ந்த பாலியல் வன்கொடுமை
April 2, 2026, 10:17 am
தாய்லாந்திலிருந்து கடத்தப்பட்ட பன்றி இறைச்சி: கெடாவில் 7 உள்ளூர் நபர்கள் கைது
April 2, 2026, 9:44 am
போலி ஆவணங்களுடன் தங்கியிருந்த நால்வர் கைது; 13 வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் பறிமுதல்
April 1, 2026, 10:45 pm
எரிபொருள், மின்சார விலைகள் குறித்து போலிச் செய்திகள் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை: பிரதமர்
April 1, 2026, 8:48 pm
