நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

காமன்வெல்த் சட்டக் கல்வி சங்கத்தின் மாநாடு 2026ஐ பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் தொடக்கி வைத்தார்

கோலாலம்பூர்:

காமன்வெல்த் சட்டக் கல்வி சங்கத்தின் மாநாட்டை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிகாரப்பூர்வமாக இன்று தொடக்கி வைத்தார்.

காமன்வெல்த் சட்டக் கல்வி சங்க மாநாடு 2026ஐ மலேசியாவில் நடைபெறுகிறது.

வேகமாக மாறிவரும் உலகில் சட்டத் தொழிலின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் கவனம் செலுத்தும் உலகளாவிய சட்டத் தலைவர்களின் ஒரு முக்கிய மாநாடான இது அமைந்துள்ளது.

இம்மாநாடு இன்றும் நாளையும் கோலாலம்பூரில் உள்ள ஷங்ரிலா ஹோட்டலில் நடைபெறுகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இம்மாநாடு, வழக்கறிஞர் பணி 2030: மாறிவரும் காமன்வெல்த்திற்கான திறன்கள், உத்தி, சட்டக் கல்வி என்ற கருப்பொருளைக் கொண்டுள்ளது. 

இம்மாநாடு காமன்வெல்த் முழுவதிலும் இருந்து நீதிபதிகள், சட்ட வல்லுநர்கள், கல்வியாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள், சட்ட மாணவர்கள் உட்பட சுமார் 350 பிரதிநிதிகளை ஒன்றிணைத்துள்ளது.

மாநாட்டின் தொடக்க விழா மலாயா பல்கலைக்கழகத்தில் உள்ள  துங்கு சான்ஸ்லர் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்  இப்ராஹிம் இம்மாநாட்டை தொடக்கி வைத்து தலைமை உரை ஆற்றினார்.

காமன்வெல்த் சட்டக் கல்வி சங்கத்தின் புரவலர் டான்ஸ்ரீ டத்தோ நல்லினி பத்மநாதன், மலாயா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் டாக்டர் நோர் அஸ்வான் அபு ஒஸ்மான், மலாயா பல்கலைக்கழகத்தின் இணை வேந்தரும் சங்கத்தின் ஆலோசகருமான டான்ஸ்ரீ ஜைனுன் அலி, காமன்வெல்த் சட்டக் கல்வி சங்கத்தின் தலைவர் பேராசிரியர் டாக்டர் எஸ். சிவக்குமார் ஆகியோர் வரவேற்பு உரையாற்றினர்.

இதனைத் தொடர்ந்து, நாட்டின் தலைமை நீதிபதி டத்தோஸ்ரீ உத்தாமா வான் அஹ்மத் ஃபரித், இந்தியாவின் தலைமை நீதிபதி  சூர்ய காந்தின் பிரதிநிதியாக நீதிபதி பிரசாந்த் குமார் மிஸ்ராவும் சிறப்புரையாற்றினர்.

40க்கும் மேற்பட்ட அனைத்துலக, உள்ளூர் பேச்சாளர்களைக் கொண்டுள்ள இந்த மாநாடு, தொழில்நுட்பம், உலகமயமாக்கல், சட்டக் கல்வி, நடைமுறையின் எதிர்காலம் உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகளைக் கையாளும் முக்கிய அமர்வுகள், தொழில்நுட்பக் குழு விவாதங்கள் அடங்கிய ஒரு ஆற்றல்மிக்க நிகழ்ச்சி நிரலை கொண்டுள்ளது.

தொழில்நுட்ப இடையூறு உலகளாவிய நிச்சயமற்ற தன்மையால் உலகெங்கிலும் உள்ள சட்ட அமைப்புகள் மறுவடிவம் பெறுவது.

இக்காலகட்டத்தில் சட்டத் தொழில் எவ்வாறு பொருத்தமானதாகவும் மீள்திறன் கொண்டதாகவும் பதிலளிக்கக்கூடியது நிலைத்திருக்க வேண்டும் என்பதை ஆராய்வதற்கு இந்த மாநாடு ஒரு முக்கிய தளத்தை வழங்குகிறது.

மேலும் காமன்வெல்த், அதற்கு அப்பால் வழக்கறிஞர் தொழிலின் எதிர்காலத்தை வடிவமைப்பதில், சட்டத் துறையில் மேன்மையை மேம்படுத்துவதற்கும் அனைத்துலக ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும் மலேசியா கொண்டுள்ள அர்ப்பணிப்பை இம்மாநாடுஅடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset