செய்திகள் மலேசியா
காப்பார் ஸ்ரீ பால தண்டாயுதபாணி ஆலயத்தில் பங்குனி உத்திர விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்
காப்பார்:
காப்பார் ஸ்ரீ பால தண்டாயுதபாணி ஆலயத்தில் பங்குனி உத்திர விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நாட்டில் உள்ள முருகன் ஆலயங்களில் பங்குனி உத்திர விழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டது.
காலை முதல் பக்தர்கள் ஆலயத்தில் கூட தொடங்கி முருகப் பெருமானை வணங்கி சென்றனர்.
அதே வேளையில் பக்தர்கள் முருகப் பெருமானுக்கு நேர்த்திக் கடனை பூர்த்தி செய்தனர்.
குறிப்பாக இவ்வாலயத்தின் ரத ஊர்வலம் மிகவும் விமரிசையாக நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆலய நிர்வாகத்தின் அழைப்பின் பேரில் மஹிமா தலைவர் டத்தோ சிவக்குமார் இவ்விழாவில் கலந்து கொண்டார்.
ஆலய நிர்வாகத்தின் அவருக்கு சிறப்பு செய்தனர்.
அதிக இந்தியர்கள் வாழும் காப்பார் நகரில் பங்குனி உத்திர விழா முகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
சாலை முழுவதும் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில் இங்குள்ள மக்கள் மற்ற இனத்தவர்களுடன் ஒற்றுமையுடன் இவ்விழாவை கொண்டாடுகின்றனர்.
இது தான் மலேசியர்களின் அழகு என்று டத்தோ சிவக்குமார் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 1, 2026, 10:45 pm
எரிபொருள், மின்சார விலைகள் குறித்து போலிச் செய்திகள் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை: பிரதமர்
April 1, 2026, 8:48 pm
ஒரு லிட்டர் டீசல் விலை 6.02 ரிங்கிட்: இதுவே வரலாற்றிலேயே மிக உயர்ந்த விலையாகும்
April 1, 2026, 8:46 pm
மாரான் மரத்தாண்டவர் ஆலயத்தில் திருவள்ளுவர் சிலை: துணையமைச்சர் 7,000 ரிங்கிட் நிதி வழங்கினார்
April 1, 2026, 5:30 pm
HRPB இதயவியல் குழுவிற்கு பிரதமர் வாழ்த்து
April 1, 2026, 5:05 pm
சாதனைக்கு ஊனம் ஒரு தடையல்ல: எஸ்.பி.எம் தேர்வில் 11 'ஏ' க்களைப் பெற்ற சதுரங்க வீரர்
April 1, 2026, 4:48 pm
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மர்மமான முறையில் மறைவு: பெந்தோங் காவல்துறை விசாரணை
April 1, 2026, 4:45 pm
