நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பங்குனி உத்திரம் போன்ற விழாக்கள் மக்களின் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்துகிறது: டத்தோ சிவக்குமார்

போர்ட் கிள்ளான்:

பங்குனி உத்திரம் போன்ற விழாக்கள் மக்களின் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்துகிறது.

மஹிமாவின் தலைவர் டத்தோ ந. சிவக்குமார் இதனை கூறினார்.


நாடு முழுவதும் இன்று பங்குனி உத்திர விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அவ்வகையில் பண்டாமாரான் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் பங்குனி உத்திர விழா மிகவும் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

அதிகமாக பக்தர்கள் தங்களின் நேர்த்திக் கடன்களை பூர்த்தி செய்தனர்.

இவ்விழாவை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்த பக்தர்களுக்கு எனது வாழ்த்துகள்.

மேலும்  ஆலயங்கள் நிலைத்து நிற்பதற்கு இதுபோன்ற விழாக்கள் முக்கிய பங்கை ஆற்றும்.

குறிப்பாக பங்குனி உத்திரம் போன்ற சமய விழாக்கள் மக்களின் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்துகிறது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset