செய்திகள் மலேசியா
எரிபொருள், மின்சார விலைகள் குறித்து போலிச் செய்திகள் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை: பிரதமர்
புத்ராஜெயா:
மத்திய கிழக்கில் நிலவும் மோதல்களால் எரிசக்தி விலைகள் உயர்ந்துள்ள நிலையில், எரிபொருள், மின்சார விலைகள் குறித்த போலிச் செய்திகள் பரவுவதற்கு எதிராக அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுப்பார்கள்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் எரிபொருள், மின்சார விலைகள் குறித்த 96 போலிச் செய்திகளை எம்சிஎம்சி கண்டறிந்துள்ளது.
மேலும், இதுபோன்ற தகவல்கள் பொதுமக்களை எளிதில் தவறாக வழிநடத்தக்கூடும் என்று அவர் எச்சரித்தார்.
இந்தப் பிரச்சினைகள் குறித்து தவறான தகவல்களைப் பரப்புவது, நாட்டின் நிலைத்தன்மையை சீர்குலைக்கும் ஒரு முயற்சி போலவும், மலிவான அரசியல் ஆதாயங்களுக்காக மக்களின் தலைவிதியுடன் சூதாடுவது போலவும் உள்ளது.
தவறான தகவல்களை, குறிப்பாக மக்கள் நம்பிக்கையையும் பொருளாதார நிலைத்தன்மையையும் பாதிக்கக்கூடிய உள்ளடக்கத்தைப் பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு போலிஸ்க்கும் எம்சிஎம்சிக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக டத்தோஸ்ரீ அன்வார் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 1, 2026, 8:48 pm
ஒரு லிட்டர் டீசல் விலை 6.02 ரிங்கிட்: இதுவே வரலாற்றிலேயே மிக உயர்ந்த விலையாகும்
April 1, 2026, 8:46 pm
மாரான் மரத்தாண்டவர் ஆலயத்தில் திருவள்ளுவர் சிலை: துணையமைச்சர் 7,000 ரிங்கிட் நிதி வழங்கினார்
April 1, 2026, 5:30 pm
HRPB இதயவியல் குழுவிற்கு பிரதமர் வாழ்த்து
April 1, 2026, 5:05 pm
சாதனைக்கு ஊனம் ஒரு தடையல்ல: எஸ்.பி.எம் தேர்வில் 11 'ஏ' க்களைப் பெற்ற சதுரங்க வீரர்
April 1, 2026, 4:48 pm
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மர்மமான முறையில் மறைவு: பெந்தோங் காவல்துறை விசாரணை
April 1, 2026, 4:45 pm
