செய்திகள் மலேசியா
போலி ஆவணங்களுடன் தங்கியிருந்த நால்வர் கைது; 13 வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் பறிமுதல்
ஜொகூர் பாரு:
ஜொகூர் பாரு, பாயு புத்தெரி பகுதியில் உள்ள ஆடம்பரக் குடியிருப்பு ஒன்றில் நேற்று மாநில குடிவரவுத் துறையினர் நடத்திய அதிரடிச் சோதனையில், சீனா நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டனர்.
43 முதல் 57 வயதுக்குட்பட்ட இவர்கள் அனைவரும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகச் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் மெக்சிகோ நாட்டின் போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி மலேசியாவிற்குள் நுழைந்து தங்கியிருந்தது சோதனையில் கண்டறியப்பட்டது.
மேலும், அவர்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து ஹாங்காங், சீனா, வியட்நாம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 13 சர்வதேச கடவுச்சீட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
தொடக்கக் கட்ட விசாரணையில், கைதான நால்வரும் இப்பகுதியில் உள்ள ஒரு கோல்ஃப் மைதான வளாகத்தில் கட்டப்பட்டு வரும் பொழுதுபோக்கு மையத்தில் பணியாற்றி வந்ததாகத் தெரியவந்துள்ளது.
முறையான ஆவணங்கள் இன்றி தங்கியிருந்தது, போலி கடவுச்சீட்டு வைத்திருந்தது போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் இவர்கள் மீது விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
தற்போது கைதான அனைவரும் 14 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். குடிவரவுச் சட்டம், கடவுச்சீட்டுச் சட்டத்தின் கீழ் இந்தச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக ஜொகூர் மாநில குடிவரவுத் துறை இயக்குநர் டத்தோ முஹம்மத் ருஸ்டி முஹம்மத் தருஸ் தெரிவித்துள்ளார்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
April 2, 2026, 10:57 am
சட்டவிரோத இல்லத்தில் 36 சிறுவர்கள்: 10 ஆண்டுகளாகத் தொடர்ந்த பாலியல் வன்கொடுமை
April 2, 2026, 10:17 am
தாய்லாந்திலிருந்து கடத்தப்பட்ட பன்றி இறைச்சி: கெடாவில் 7 உள்ளூர் நபர்கள் கைது
April 1, 2026, 10:45 pm
எரிபொருள், மின்சார விலைகள் குறித்து போலிச் செய்திகள் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை: பிரதமர்
April 1, 2026, 8:48 pm
ஒரு லிட்டர் டீசல் விலை 6.02 ரிங்கிட்: இதுவே வரலாற்றிலேயே மிக உயர்ந்த விலையாகும்
April 1, 2026, 8:46 pm
