நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஒரு லிட்டர் டீசல் விலை 6.02 ரிங்கிட்: இதுவே வரலாற்றிலேயே மிக உயர்ந்த விலையாகும்

புத்ராஜெயா:

தீபகற்ப மலேசியாவில் ஏப்ரல் 2 முதல் 8 வரையிலான காலகட்டத்தில் டீசலின் சில்லறை விலை ஒரு லிட்டருக்கு 6.02 ரிங்கிட்டாக அதிகரித்துள்ளது.

தானியங்கி விலை நிர்ணய முறையில் செய்யப்பட்ட சரிசெய்தலால், கடந்த வார விலையுடன் ஒப்பிடும்போது டீசலின் சில்லறை விலை 0.50 சென் அதிகரித்துள்ளது.

மானியத்துடன் அல்லது மானியம் இல்லாமல், ரோன் 95-இன் விலை முறையே ஒரு லிட்டருக்கு 1.99 ரிங்கிட், 3.87 ரிங்கிட் என்ற அளவில் நீடித்தது.

கூடுதலாக ரோம் 97இன் சில்லறை விலை முன்பு ஒரு லிட்டருக்கு 5.15 ரிங்கிட்டாக  இருந்த நிலையில், தற்போது 20 சென் குறைந்து 4.95 ரிங்கிட்டாக உள்ளது.

இதற்கிடையில், சபா, சரவா, லபுவான் ஆகிய பகுதிகளில் டீசலின் சில்லறை விலை ஒரு லிட்டருக்கு 2.15 ரிங்கிட் என்ற அளவிலேயே நீடிக்கிறது.

தற்போது நிலவிவரும் உலகளாவிய எரிசக்தி நெருக்கடியால், பிரென்ட் கச்சா எண்ணெயின் விலை 40 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்து, ஒரு பேரலுக்கு 100 அமெரிக்க டாலருக்கும் மேல் சென்றுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset