நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பற்றி எரியும் திறந்தவெளி நிலங்கள்: மீரியில் மட்டும் 86 சம்பவங்கள் பதிவு

மீரி:

சரவாக் மாநிலத்தின் வடக்கு மண்டலத்தில், குறிப்பாக மீரி பகுதியில் கடந்த இரண்டு வாரங்களில் திறந்தவெளித் தீ விபத்துச் சம்பவங்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளன. 

கடந்த மார்ச் 15 முதல் 31-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் மட்டும் மாநிலம் முழுவதும் மொத்தம் 271 தீ விபத்து புகார்கள் பதிவாகியுள்ளதாகத் தீயணைப்புத் துறையின் மூத்த அதிகாரி இஸ்மாயிடி இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

இதில் அதிகபட்சமாக மீரி பகுதியில் மட்டும் 86 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதனைத் தொடர்ந்து சிபுவில் 43 சம்பவங்களும், முக்காவில் 41 சம்பவங்களும் பதிவாகியுள்ளன. 

பிந்துலு, கூச்சிங், பெத்தோங் ஆகிய பகுதிகளிலும் குறிப்பிடத்தக்க அளவில் தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இந்தத் தீ விபத்துகளைக் கட்டுப்படுத்தவும், அவை மேலும் பரவாமல் தடுக்கவும் தீயணைப்பு வீரர்கள் 24 மணிநேரமும் தீவிர கண்காணிப்பு, அணைப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போதைய வறண்ட வானிலையைக் கருத்தில் கொண்டு, பொதுமக்கள் எவ்விதத் திறந்தவெளித் தீ மூட்டும் நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாம் எனத் தீயணைப்புத் துறை கடுமையாக எச்சரித்துள்ளது. 

குறிப்பாக நிலக்கரி மண் நிறைந்த பகுதிகளில் சிறு தீப்பொறி ஏற்பட்டாலும் அது பெரும் ஆபத்தாக முடியும் என்பதால், பொதுமக்கள் மிகுந்த பொறுப்புடன் செயல்பட வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset