செய்திகள் மலேசியா
பதின்ம வயதுப் பெண்ணிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட 37 வயது நபர் கைது
பத்து பஹாட்:
பாரிட் சுலோங் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், குளித்துக் கொண்டிருந்த தனது 17 வயது உறவினரை அநாகரிகமான முறையில் பார்த்ததாகச் சந்தேகிக்கப்படும் 37 வயது டுரியான் வியாபாரி ஒருவரைப் போலிசார் கைது செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாகச் சம்பந்தப்பட்ட நபருக்கு இன்று முதல் வெள்ளிக்கிழமை வரை மூன்று நாட்கள் தடுப்புக் காவல் விதித்து பத்து பஹாட் நீதிபதி நூராசிதா ஏ ரஹ்மான் உத்தரவிட்டுள்ளார்.
நேற்று நடந்த இந்தச் சம்பவத்தின் போது, அந்தப் பெண் குளியலறையில் இருந்து அலறும் சத்தம் கேட்டு அவரது தாய் ஓடி வந்துள்ளார். அப்போது குளியலறையின் வெளியே ஒரு மர்ம நபர் இருப்பதை அந்தப் பெண் கவனித்துள்ளார்.
ஆனால், அந்த நபர் உடனடியாக அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். எனினும், வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த காரை வைத்து, அந்த நபர் தனது உறவினர்தான் என்பதைப் பாதிக்கப்பட்ட பெண் அடையாளம் கண்டுள்ளார்.
புகார்தாரரின் கூற்றுப்படி, அந்த நபர் எவ்விதக் காணொலியையும் பதிவு செய்வதற்கு முன்னரே அவரது செயல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து 2017-ஆம் ஆண்டு சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றச் சட்டத்தின் கீழ் காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.
புகாரைத் தொடர்ந்து விரைந்து செயல்பட்ட போலிசார், சந்தேக நபரை அவரது வீட்டில் வைத்து கைது செய்து மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
April 10, 2026, 11:20 pm
ரபிசி குறித்து கருத்து தெரிவிக்க மறுப்பு; பொருளாதாரத்திற்கே அதிக முன்னுரிமை: பிரதமர்
April 10, 2026, 11:19 pm
எஸ்பிஎம் தேர்வின் நன்னெறி பாடத்தில் ஏ எடுப்பது அவ்வளவு சிரமமா?: டத்தோ நெல்சன் கேள்வி
April 10, 2026, 11:17 pm
தெலுக் இந்தானில் சித்ரா பௌர்ணமி திருவிழா; தற்காலிக வணிகக் கூடாரங்கள் இடம் மாற்றம் காணாது: சிவநேசன்
April 10, 2026, 11:16 pm
80ஆம் ஆண்டு நிறைவு விழா; மஇகாவின் அடையாளத்தையும் சாதனையையும் பறைசாற்றும்: டத்தோ முருகையா
April 10, 2026, 3:43 pm
நாற்காலியால் மனைவியை அடித்த வேலையில்லாதவருக்கு RM3,500 அபராதம்
April 10, 2026, 3:33 pm
மலேசியாவின் 6 கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்துவிட்டன
April 10, 2026, 3:32 pm
பற்றி எரிந்த அடுக்குமாடி வீடு: 60 வயது முதியவர் உடல் கருகிய நிலையில் மீட்பு
April 10, 2026, 3:23 pm
பெலூரானில் 157 மாணவர்கள் தவிப்பு: வெயிலிலும் மழையிலும் கூடாரத்தின் கீழ் கல்வி பயிலும் அவலம்
April 10, 2026, 12:55 pm
