நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உலகளவில் நிச்சயமற்ற தன்மைகள் இருந்தபோதிலும் மலேசியாவின் பொருளாதாரம் மீள்திறனுடன் உள்ளது: பிரதமர்

கோலாலம்பூர்:

உலகளவில் நிச்சயமற்ற தன்மைகள் இருந்தபோதிலும் மலேசியாவின் பொருளாதாரம் மீள்திறனுடன் உள்ளது.

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

அதிகரித்து வரும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகள் இருந்தபோதிலும், தொடர்ச்சியான ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சியை உறுதி செய்வதற்காக அரசாங்கம் தனது 'திட்டம் பி' நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதால், மலேசியாவின் பொருளாதாரம் மீள்திறனுடன் உள்ளது.

கொள்கைத் தெளிவு, அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் நிறுவன ஒருங்கிணைப்பு ஆகியவற்றால் ஆதரிக்கப்படும் வலுவான பொருளாதார அடிப்படைகள், மலேசியாவை ஒரு கவர்ச்சிகரமான முதலீட்டு இடமாகத் தொடர்ந்து நிலைநிறுத்துகின்றன.

தெளிவான பொருளாதார மீள்திறன் உள்ளது... மேலும் மலேசியா ஒரு கவர்ச்சிகரமான முதலீட்டு இடமாகத் தொடர்கிறது.

அந்த வகையில், பொருளாதாரத்தை வளர்ச்சிக்குத் தயார்படுத்தக்கூடிய திட்டங்களை நாங்கள் வகுத்து வருகிறோம்.

மத்திய வங்கி, கருவூலம் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களுக்கு இடையேயான வலுவான ஒருங்கிணைப்பு மற்றும் சீரான பொருளாதார மேலாண்மையின் விளைவாக,வட்டார அளவில் எங்களால் இந்த நிலையைத் தக்கவைத்துக் கொள்ள முடிந்தது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset