நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

திறன் மேம்பாட்டு நிதிக் கழகத்தின் இயக்குநர்கள் குழு உறுப்பினர்களாக ரமெல் அஷ்ராம் ரம்லி, ஹசிம் ஜமாத் நியமனம்

புத்ராஜெயா:

திறன் மேம்பாட்டு நிதிக் கழகத்தின் இயக்குநர் குழு உறுப்பினர்களாக ரமெல் அஷ்ராம் ரம்லி, ஹசிம் ஜமாத் ஆகியோரை மனிதவள அமைச்சு நியமித்துள்ளது.

புதிய உத்திசார்ந்த,  அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் திறன் பயிற்சிகள் மூலம் மனித மூலதன மேம்பாட்டை வலுப்படுத்தும் நோக்கில் இந்த இரு அனுபவமிக்க நபர்களின் நியமனம் செய்யப்பட்டுள்ளது என்று மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ ஆர். ரமணன் கூறினார்.

இயக்குநர் குழு உறுப்பினராகவும், துணைத் தலைவராகவும் ரமெல் அஷ்ராம் நியமிக்கப்பட்டிருப்பது, பயிற்சி நிதித் திட்டங்களின் செயல்திறனை மேம்படுத்துதல் மற்றும் தொழில்துறை தேவைகளுக்கும் நாட்டின் தொழிலாளர் சக்தி மேம்பாட்டிற்கும் இடையே இணக்கத்தை உறுதி செய்தல் உள்ளிட்ட கழகத்தின்  முக்கிய உத்திகளை வலுப்படுத்துவதில் ஒரு முக்கியப் பங்காற்றும்.

இதற்கிடையில், தொழிலாளர் சக்தி திறன் பயிற்சித் துறையில் பரந்த அனுபவம் கொண்ட அஹ்சிம், கொள்கைத் திட்டமிடலை மேற்கொள்வார்.

மேலும் மேலும் பதிலளிக்கக்கூடிய, அனைவரையும் உள்ளடக்கிய,  வளர்ந்து வரும் தொழில்துறையின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பயிற்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதையும் வலுப்படுத்த உதவுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset