செய்திகள் மலேசியா
பெராவில் ஆடவரை பாராங்கத்தியால் வெட்டிய நான்கு இந்தியர்களை போலிஸ் தேடி வருகிறது
பெரா:
ஆடவர் ஒருவரை பாராங் கத்தியால் வெட்டி, பலத்த காயங்களை ஏற்படுத்திய வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நான்கு இந்திய சந்தேக நபர்களை போலிஸ் தேடி வருகிறது.
பெரா மாவட்ட போலிஸ் தலைவர் சூல்கிப்லி நசீர் இதனை கூறினார்.
கடந்த மார்ச் 29 அன்று இரவு சுமார் 9.16 மணியளவில், பெராவின் திரியாங்கில் உள்ள மிங் வாங் கோபிடியம் மதுபான விடுதியில் இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.
சம்பவத்திற்குப் பிறகு அனைத்து சந்தேக நபர்களும் ஒரு காரில் தப்பிச் சென்றதாக நம்பப்படுகிறது.
காயமடைந்த 35 வயது நபர் ஆரம்பத்தில் சிகிச்சைக்காக பெரா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ஆனால் அவரது கடுமையான காயங்கள் காரணமாக தெமர்லோவில் உள்ள சுல்தான் ஹாஜி அகமது ஷா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
பாதிக்கப்பட்டவர் இன்னும் சுயநினைவின்றி இருக்கிறார் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய 27 முதல் 39 வயதுக்குட்பட்ட நான்கு சந்தேக நபர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும் அவர்கள் அனைவருக்கும் குற்றவியல், போதைப்பொருள் தொடர்பான குற்றப் பதிவுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தண்டனைச் சட்டத்தின் 326ஆவது பிரிவின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும், விசாரணைக்கு உதவுவதற்காக நான்கு சந்தேக நபர்களும் பேரா மாவட்ட காவல் தலைமையகம் அல்லது அருகிலுள்ள ஏதேனும் காவல் நிலையத்தில் ஆஜராகுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 1, 2026, 12:22 pm
வெப்ப அலையை எதிர்கொள்ளும் மலேசிய அரசு: 4 மாநிலங்களில் செயற்கை மழை பொழியவைக்கும் அதிரடித் திட்டம்
April 1, 2026, 12:14 pm
மீண்டும் கொழுந்துவிட்டு எரியும் நிலத்தடித் தீ: கிராம மக்கள் கடும் பீதி
April 1, 2026, 11:55 am
மேற்காசிய மோதல்: மலேசியாவின் நிலையை வலுப்படுத்த 3 துறைகளை உலக வங்கி கோடிட்டுக் காட்டுகிறது
April 1, 2026, 11:52 am
மர்மமான முறையில் மாயமான 39 வயதுப் பெண்: தீவிர தேடுதலில் பினாங்கு போலிஸ்
April 1, 2026, 11:10 am
கிள்ளானில் நடந்த கோரமான விபத்திற்கு காரணமான கார் ஓட்டுநர் மீது கொலைக் குற்றச்சாட்டு
April 1, 2026, 10:48 am
வசதி குறைந்த மாணவர்களுக்கு உதவ க்யூஎஸ்ஆர் பிராண்ட்ஸ் ஒரு மில்லியன் ரிங்கிட் நன்கொடை அளிக்கிறது
April 1, 2026, 10:41 am
