செய்திகள் மலேசியா
கிள்ளானில் நடந்த கோரமான விபத்திற்கு காரணமான கார் ஓட்டுநர் மீது கொலைக் குற்றச்சாட்டு
கிள்ளான்:
கிள்ளானில் நடந்த கோரமான விபத்திற்கு காரணமான கார் ஓட்டுநர் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இங்குள்ள ஜாலான் ராயா பாரத் சாலையில் நடந்த கோரமான சாலை விபத்தில் 33 வயதான அமிருல் ஹபிஸ் ஓமர் என்பவர் மரணமடைந்தார்.
மதுபோதையில் இருந்ததாக நம்பப்படும் ஆடவர் ஓட்டிச் சென்ற வாகனம் மோதியதால் அவர் மரணமடைந்தார்.
இந்நிலையில் அந்த விபத்தில் சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மீது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொலை வழக்குகள் உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் வருவதால், 28 வயதான ஆர். சக்திகானபதியிடமிருந்து எந்த வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.
மேலும் சக்திகானபதி மீது, அபாயகரமான போதைப்பொருட்களை உட்கொண்டதற்காக 1952 ஆம் ஆண்டின் அபாயகரமான போதைப்பொருள் சட்டத்தின் கீழும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302-இன் கீழ் இந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
இப்பிரிவின்படி, குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், மரண தண்டனை அல்லது 30 ஆண்டுகளுக்குக் குறையாமலும், அதிகபட்சம் 40 ஆண்டுகள் வரையிலும் சிறைத்தண்டனையும், 12 பிரம்படிகளுக்குக் குறையாமலும் விதிக்கப்படும்.
மேலும் போதைப் பொருள் விவகாரத்தில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது 5,000-க்கு மிகாத அபராதம் மற்றும் இரண்டு ஆண்டுகளுக்குக் குறையாமலும், மூன்று ஆண்டுகளுக்கு மிகாமலும் ஒரு கண்காணிப்பு உத்தரவு விதிக்கப்படும்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 1, 2026, 12:22 pm
வெப்ப அலையை எதிர்கொள்ளும் மலேசிய அரசு: 4 மாநிலங்களில் செயற்கை மழை பொழியவைக்கும் அதிரடித் திட்டம்
April 1, 2026, 12:14 pm
மீண்டும் கொழுந்துவிட்டு எரியும் நிலத்தடித் தீ: கிராம மக்கள் கடும் பீதி
April 1, 2026, 11:55 am
மேற்காசிய மோதல்: மலேசியாவின் நிலையை வலுப்படுத்த 3 துறைகளை உலக வங்கி கோடிட்டுக் காட்டுகிறது
April 1, 2026, 11:52 am
மர்மமான முறையில் மாயமான 39 வயதுப் பெண்: தீவிர தேடுதலில் பினாங்கு போலிஸ்
April 1, 2026, 10:48 am
வசதி குறைந்த மாணவர்களுக்கு உதவ க்யூஎஸ்ஆர் பிராண்ட்ஸ் ஒரு மில்லியன் ரிங்கிட் நன்கொடை அளிக்கிறது
April 1, 2026, 10:42 am
பெராவில் ஆடவரை பாராங்கத்தியால் வெட்டிய நான்கு இந்தியர்களை போலிஸ் தேடி வருகிறது
April 1, 2026, 10:41 am
